செட்டிப்பட்டி தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் இதுவரை அரசிராமணி பேரூராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

2024ஆம் ஆண்டு இறுதியில் வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால், ஆங்காங்கே வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. நீர்நிலைகளில் இருந்தும் நீர் வெளியேறின. அதேபோல், சரபங்கா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், எடப்பாடியில் இருந்து குமாரபாளையம் செல்லும் வழியில் செட்டிப்பட்டி சாலையில் அதிகளவில் தண்ணீர் புகுந்தது.

செட்டிப்பட்டி பகுதியில் உள்ள விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகள், சாலையோர மளிகை கடை உள்ளிட்டவைகளிலும் நீர் புகுந்தது. 4 அடி உயரம் வரை தண்ணீர் தேங்கியதால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும், பால் வாங்குவதற்காக மக்கள் பரிசலில் சென்று வாங்கிச் செல்லும் நிலை கூட ஏற்பட்டது.

மேலும், இந்த மழை வெள்ளத்தில் செட்டிப்பட்டி சந்தையில் இருந்து பொன்னு சமுத்திரம் ஏரி கரைக்கு செல்லும் பாதையில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், அந்த கரையில் இருந்து இந்த கரை வரை சுற்றிவர 4 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டு ஒரு மாதங்களுக்கு மேலாகியும், இதுவரை அரசிராமணி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால், இருசக்கர வாகனங்கள் சென்று வரும் அளவிற்கு அப்பகுதி மக்களே பாதையை அமைத்து வருகின்றனர்.

Read More : எத்தன பேர ஏமாத்துவ?. கள்ளக்காதலனுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு வேறொருவருடன் உல்லாசம்!. ஸ்கெட்ச் போட்டு சம்பவம் செய்த இளைஞர்!.