சுடுதண்ணீரில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய 3வயது குழந்தை, 9 நாட்களுக்குபின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள திருவெற்றியூர், திருவேதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது 3 வயது குழந்தை ஓவியா. இந்தநிலையில், கடந்த 9 நாட்களுக்கு முன்னதாக சிறுமியை குளிக்க வைக்க பாத்திரத்தில் சுடுதண்ணீர் போட்டு அவரது தாய் வைத்துள்ளார். அப்போது, விளையாடிக்கொண்டிருந்த சிறுமி ஓவியா, சுடு தண்ணீர் பாத்திரத்தை விளையாட்டாக இழுத்துள்ளார். இதில், சுடுதண்ணீர் எதிர்பாராத விதமாக சிறுமி ஓவியா மீது கொட்டியுள்ளது. இதையடுத்து, சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர், பலத்த காயமடைந்த சிறுமியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அதாவது, கடந்த 9 நாட்களாக சிறுமி படுகாயத்துடன் உயிருக்கு போராடி வந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சிறுமி, 9 நாட்களுக்குப்பின் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Readmore: கழுத்தை நெரித்த கடன்..!! கருணையே இல்லாமல் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற தம்பதி..!! கடைசியில் நடந்த திடீர் திருப்பம்..!!