வகுப்பில் ஆசிரியர் பாடம் எடுத்துக்கொண்டிருக்கும்போதே, மாணவர் ஒருவர் திடீரென வெளியே சென்று 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பகீர் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் பத்தேனப்பள்ளி மண்டலத்தில் உள்ள ராமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது மாணவன், இவர், அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள நாராயண கல்லூரியில் இடைநிலை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்தநிலையில், சங்கராந்தி விடுமுறை முடிந்து இன்று காலை கல்லூரிக்கு அனைத்து மாணவர்களும் சென்றுள்ளனர். அதாவது, இன்று காலை 9:30 மணியளவில் இந்த சிறுவன் கல்லூரிக்கு சென்றதாகவு, வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது, 11:55 மணியளவில், திடீரென வகுப்பறையில் இருந்து வெளியே சென்று மூன்றாவது மாடியில் இருந்து குதித்தான்.
இதையடுத்து, உடனடியாக காயமடைந்த சிறுவனை கல்லூரி நிர்வாகத்தினர், உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றது, ஆனால் பரிசோதனையின் பின்னர் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் வகுப்பறையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. தற்கொலைக்கான காரணம் இதுவரை வெளிவராத நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.