பள்ளி கழிவறையில் வைத்து 8ம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்​த சம்பவம் தொடர்பாக 3 ஆசிரியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே​யுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி​யில் 8ம் வகுப்பு படித்து வரும் மாணவி கடந்த ஒரு மாதமாகப் பள்ளிக்கு வரவில்லை. இது தொடர்பாக தலைமை ஆசிரியை மாணவி​யின் வீட்டுக்கு நேற்று முன்​தினம் மாலை சென்று விசாரித்துள்ளார். அப்போது பள்ளி​யில் பணிபுரி​யும் ஆசிரியர்கள் ஆறுமுகம் (48), சின்னசாமி (57), பிரகாஷ் (37) ஆகியோர் மாணவியைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்​ததாகவும் இதில் கருத்தரித்த மாணவிக்​கு, கருக்கலைப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்​பாக, குழந்தைகள் நல பாது​காப்பு மையம் மற்றும் பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலை​யத்​துக்​கும் பள்ளியின் தலைமையாசிரியர் புகார் அளித்தார். இதையடுத்து, டிஎஸ்பி முத்து​கிருஷ்ணன் தலைமையிலான போலீ​ஸார், இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் ஆறுமுகம், சின்னசாமி, பிரகாஷ் ஆகியோரை போக்சோ சட்டத்​தின்​கீழ் கைது செய்​தனர். மேலும், 3 பேரை​யும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலுவலர் (பொ) முனிராஜ் உத்தர​விட்​டுள்​ளார். பாதிக்​கப்​பட்ட மாணவிக்​கு, கிருஷ்ணகிரி அரசு மருத்​துவக் கல்லூரி மருத்​துவ​மனை​யில் மருத்​துவப் பரிசோதனை செய்​யப்​பட்​டது.

இதனிடையே, தகவலறிந்த மாணவர்​களின் பெற்​றோர் மற்றும் கிராம மக்கள் நேற்று காலை பள்ளியை முற்றுகை​யிட்டு, சாலை மறியலில் ஈடுபட்​டனர். அவர்கள் கூறும்​போது, ‘வேறு மாணவிகள் யாரும் பாதிக்​கப்​பட்​டுள்​ளார்களா என்று விசாரணை நடத்த வேண்டும். கைதான 3 ஆசிரியர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும்’ என்​றனர். அவர்களை ச​மா​தானப்​படுத்​திய ​போலீ​ஸார், உரிய நடவடிக்கை எடுப்​ப​தாகக் கூறி அங்​கிருந்து அனுப்​பி வைத்​தனர். இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் வெளி​யிட்​டுள்ள செய்திக்​குறிப்​பில், “பாதிக்​கப்​பட்ட சிறுமிக்கு மனநல ஆலோசனை வழங்கப்​பட்டு உள்ளது. சிறுமிக்கு கருக்​கலைப்பு நடந்​ததாக தவறான தகவல்​களைப் பரப்ப வேண்​டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Readmore: பயனர்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் அபேஸ்!. போலி ஆவணங்களை தயாரித்து வங்கி அதிகாரிகள் பலே மோசடி!. சிக்கியது எப்படி?