பெங்களூரில் இரண்டு குழந்தைகளைக் கொன்றுவிட்டு தம்பதி தற்கொலை செய்து கொண்ட சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் உத்தரபிரதேசத்தை சேர்ந்த அனூப் – ராக்கி தம்பதி. மற்றும் 5 மற்றும் 2 வயது குழந்தைகள் உடலும் கைப்பற்றப்பட்டது. தகவலறிந்து விரைந்து சென்ற சதாசிவ நகர் போலீசார், 4 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தை சேர்ந்த அனூப், தனது மனைவி ராக்கி மற்றும் 2 குழந்தைகளுடன் பெங்களூரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அனூப் தனியார் நிறுவனத்தில், மென்பொருள் ஆலோசகராக பணியாற்றி வந்துள்ளார். இரவில் இரு குழந்தைகளை கொன்றுவிட்டு தம்பதியர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். அனூப் வீட்டில் 3 பேர் வேலைக்கு பணியமர்த்தப்பட்டிருந்தனர். முதல் குழந்தைக்கு மன நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.இதனால் தம்பதியினர் மிகுந்த மன வருத்தத்தில் இருந்ததாகவும் தெரிகிறது.

இந்தநிலையில், புதுச்சேரிக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்று வேலையாட்களிடம் கூறிவிட்டு இரவு தூங்கியுள்ளனர். அதன்படி, சம்பவத்தன்று காலை வேலையாட்கள் 3 பேரும் வீட்டிற்கு வந்து ஞாயிற்று கிழமையே பேக்கிங் செய்துள்ளனர். 3 தொழிலாளர்களில் 2 பேர் சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்ததாகவும் மற்றொருவர் குழந்தைகளை கவனித்து கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இவர்கள் 3 பேருக்கும் மாதம் ரூ.15 ஆயிரம் ஊதியம் வழங்கி வந்துள்ளனர். பொருளாதார ரீதியில் நல்ல நிலையில் இருந்தாலும், முதல் குழந்தை மன நலம் பாதிக்கப்பட்டதால் தம்பதிகள் மிகுந்த வருத்தத்தில் இருந்ததாக தொழிலாளர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து, கொலையா, தற்கொலை என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Readmore: “நான் துப்பாக்கி வைத்திருக்கிறவன்… இரண்டு குண்டாவது வெடிக்கணும்”..!! ”உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா”..? பரபரப்பை கிளப்பிய சீமான்..!!