கருப்பை புற்றுநோய் என்பது பல பெண்களுக்கு தாமதமாகவே கண்டறியப்படும் ஆபத்தான நோயாக இருக்கிறது. “சைலண்ட் கில்லர்” எனப்படும் இந்த நோய் ஆரம்பத்தில் பெரிதாகத் தெரியாமல், சாதாரண உடல் கோளாறாகவே தோன்றுகிறது. எனவே, இந்நோயின் எச்சரிக்கை அறிகுறிகள், அபாயக் காரணங்கள் மற்றும் தற்காப்பு வழிகளை தெரிந்துக் கொள்வது மிக அவசியம்.
தினசரி சோர்வா? வயிறு வீக்கமா? அவசரமாக சிறுநீர் போக வேண்டுமா? இவை எல்லாம் பொதுவான பிரச்சனைகள் போல் தோன்றலாம். ஆனால் சில நேரங்களில் இவை மிகப்பெரிய ஆபத்தாக இருக்கும். அந்தவகையில், “சைலண்ட் கில்லர்” என்று அழைக்கப்படும் கருப்பை புற்றுநோய் (Ovarian Cancer) என்பது, பெண்களுக்கு உண்டாகும் மிகவும் ஆபத்தான புற்றுநோய்களில் ஒன்றாகும்.
கருப்பை என்பது பெண்களின் முட்டை உற்பத்தி செய்யும் பகுதி. இந்த பகுதியில் உள்ள செல்கள் தவறாக வளர்ந்து கட்டி ஏற்பட்டு பிற உறுப்புகளுக்கும் பரவும்போது அதையே கருப்பை புற்றுநோய் என்று கூறுகிறோம். இந்த புற்றுநோயால் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அதிக ஆபத்து உள்ளது. அவர்களுக்கு மாதவிடாய் நிறைந்த பிறகு அதிகம் பாதிக்கப்படும். குடும்பத்தில் மார்பக அல்லது கருப்பை புற்றுநோய் வரலாறுள்ள பெண்களுக்கு அதிக அபாயம் உள்ளது.
BRCA1 மற்றும் BRCA2 என்ற மரபணு மாற்றங்கள். வெள்ளை இனத்தில் பிறந்த பெண்களுக்கு சற்றே அதிகம் அதிக உடல் எடை, புகைபிடிப்பு, நீரிழிவு உள்ளவர்களுக்கு வாய்ப்பு அதிகம். கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள் என்னவென்றால், அடிக்கடி வயிறு வீக்கம், இடுப்பு பகுதியில் வலி, சாப்பிட சிரமம் அல்லது விரைவில் வயிறு நிறைந்த உணர்வு, அடிக்கடி சிறுநீர் போவது அல்லது அவசர உணர்வு. மங்கிய உடல்நிலை அல்லது சோர்வு, முதுகு வலி, குடல் இயக்கத்தில் மாற்றம், எடை குறைதல் (விவரிக்க முடியாத வகையில்) ஆகிய இந்த அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.
புற்றுநோய் வராமல் இருக்க முழுமையான வழி இல்லை என்றாலும், வாய்வழி கருத்தடை மாத்திரைகள் நீண்ட காலம் பயன்படுத்தினால் கருப்பை புற்றுநோயின் வாய்ப்பு குறைவாகும். கர்ப்பம் மற்றும் தாய்ப்பால் ஆகிய இந்த அனுபவங்கள் கருப்பையை பாதுகாக்கும் தன்மை கொண்டவை. குடும்பத்தில் வரலாறு இருந்தால் மரபணு பரிசோதனை செய்து ஆலோசனை பெறலாம். உடல்நல பரிசோதனை மூலம் ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும் மிக அதிக ஆபத்துள்ளவர்கள் குழாய் பந்தம் அல்லது கருப்பை அகற்றும் சிகிச்சையை முன்னெடுத்து பாதுகாக்கலாம். சீரான உணவு, தினசரி உடற்பயிற்சி, புகைபிடித்தலை தவிர்த்து எடை கட்டுப்பாடு இருக்க வேண்டும்.
கருப்பை புற்றுநோய் ஒரு முழுமையாகத் தவிர்க்க முடியாத நோயாக இருந்தாலும், நம் விழிப்புணர்வும், உடலைக் கவனிப்பதுவும், மரபணு மற்றும் மருத்துவ பரிசோதனைகளும், ஆரோக்கிய வாழ்க்கை முறையும், இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உயிரைக் காக்க உதவுகின்றன.