இந்தியாவில் ஆதார் அட்டை என்பது முக்கியமான அடையாள ஆவணமாகும். பல முக்கிய செயல்களுக்கு இது தேவைப்படும். உதாரணமாக சிம்கார்ட் வாங்குதல், வங்கிக் கணக்கு ஆரம்பித்தல், அரசு நலத் திட்டங்களை பெறுதல் என பல வகைகளில் பயன்படுகிறது. இந்நிலையில், உங்கள் ஆதார் கார்டு மட்டும் இருந்தாலே போதும். இப்போது ரூ.2 லட்சம் வரை தனிப்பட்ட கடன் (personal loan) எளிதாக பெறலாம் என்ற புதிய வசதி அறிமுகமாகியுள்ளது. இது பற்றி பலருக்குத் தெரியாமலேயே உள்ளது.

யாருக்கு இந்த கடன் கிடைக்கும்..?

உங்கள் வயது 21 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். மாதம் குறைந்தபட்சம் ரூ.15,000 முதல் ரூ.25,000 வருமானம் இருக்க வேண்டும். ஆதார் அட்டை செயல்பாட்டில் இருக்க வேண்டும். கூடுதல் ஆவணங்கள் (பான் கார்டு, வங்கி கணக்கு விவரம்) தேவைப்படாமல், உங்கள் ஆதார் அடிப்படையிலேயே இந்த கடனை பெற முடியும். இந்த வசதி, சில தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் (NBFCs) கிடைக்கிறது. Mobikwik, Paytm, KreditBee, Navi போன்ற ஆன்லைன் app-கள் வாயிலாகவும் இந்தக் கடனைப் பெற முடியும்.

உங்கள் தேவைக்கு ஏற்ப பணத்தை உடனே பெறலாம். மருத்துவ செலவுகள், கல்விச் செலவுகள் போன்ற சந்தர்ப்பங்களில் இது உதவியாக இருக்கும். உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்தினால் உங்கள் நற்பெயர் (credit score) உயரும். தேவைக்கு ஏற்ப மட்டுமே கடன் பெற வேண்டும். திருப்பி செலுத்தும் திறனை வைத்தே கடன் எடுக்க வேண்டும். உண்மையான நிதி நிறுவனங்களையே அணுக வேண்டும்.

Read More : “திருமணமே ஆகாமல் சேர்ந்து வாழ்ந்த காதலர்கள்”..!! “காதலிக்கு யூடியூப் வீடியோவை பார்த்து பிரசவம்”..!! ஈரோட்டில் அதிர்ச்சி..!!