தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வித்தரத்தை அரசுப் பள்ளிகளில் கொண்டு வர aரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் குறித்த தகவல்களை எமிஸ் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளை அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது, எமிஸ் தளத்தில் அரசுப் பள்ளிகள் சார்ந்த அனைத்து தகவல்களும் பதிவேற்றம் செய்யப்படும். இந்த பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுவதால், மாணவர்களுக்கு பாடம் எடுப்பதில் சிக்கல் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதன் காரணமாக ஆசிரியர்களுக்கு அந்த வலைதளத்தில் பதிவேற்றும் செய்யும் பணிகளை வழங்கக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அத்துடன், ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு பயிற்சி கொடுத்து அவர்களை எமிஸ் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளது.