நடிகர் விஷால் செய்தியாளர்களிடம் பேசும்போது, ”தவறான எண்ணத்தில் அழைக்கும் திரைத்துறையினர் யாராக இருந்தாலும், நடிகைகள் அவர்களை செருப்பால் அடிக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி தரும் விதமாக ”என்னிடம் நிறையச் செருப்பு உள்ளது. உனக்கு ஒன்று வேண்டுமா..?” என்று நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தான் இதுகுறித்து நடிகை ராதிகா கூறுகையில், “தமிழ் சினிமாவில் பிரபல பாடகி ஒருவர் தனக்கு நடந்த பாலியல் அத்துமீறல் சம்பவம் குறித்து தெரிவித்தபோது, எதற்காக இத்தனை நாட்கள் கழித்து சொல்கிறீர்கள்..? இதற்கு என்ன சாட்சி இருக்கிறது..? என்றெல்லாம் கேள்வி கேட்டனர். ஒரு பெண்ணின் மனதில் ஓடக்கூடிய விஷயங்களை ஆண்கள் புரிந்துகொள்ள முடியாது. தற்போது அந்த பாடகி, வாய்ப்புகள் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்.

பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவோரை செருப்பால் அடிக்க வேண்டுமென விஷால் கூறியிருப்பது முறையான பதில் அல்ல. இது ஒரு தலைவர் பேசும் பேச்சு கிடையாது. நடிகைகள் குறித்து யூடியூபர் ஒருவர் மிகவும் தரக்குறைவாக பேசி வருகிறார். விஷாலுக்கு தைரியம் இருந்தால், அவரை செருப்பால் அடிக்கட்டும். என்னை அழைத்தால் துடைப்பத்துடன் நானும் வருவேன்” என்று தெரிவித்துள்ளார்.

Read More : எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவுக்கு தாவிய ஓபிஎஸ், திமுக நிர்வாகிகள்..!!