வாழப்பாடி அருகே அதிவேகத்தில் சென்ற ஆம்னி பேருந்து, முன்னால் சென்ற சிமெண்ட் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

சென்னையில் இருந்து சேலம் நோக்கி வந்த இரண்டு ஆம்னி பேருந்துகள் அதிக வேகத்தில் பயணித்துள்ளன. இந்த பேருந்துகளில் ஒவ்வொன்றிலும் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இன்று காலை 6 மணியளவில் வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி பகுதியை கடக்கும்போது ஒரு ஆம்னி பேருந்து, முன்னே சென்ற மற்றொரு ஆம்னி பேருந்தை கடக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக சிமெண்ட் லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஆம்னி பேருந்து ஓட்டுனர் பூபதி உள்ளிட்ட மூன்று பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அப்பகுதியில் இருந்த சுங்கச்சாவடி ஊழியர்களால் அவர்கள், உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து நடந்ததும் வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பேருந்துகள் ஒன்றோடு ஒன்று போட்டிப் போட்டுக் கொண்டு வேகமான சென்றதால் தான், இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Read more : நண்பனின் காதலிக்கு ரூட்டு போட்ட சக நண்பன்..!! கல்லூரி வளாகத்திற்குள் புகுந்து சரமாரி வெட்டு..!! துடிதுடித்து உயிரிழந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்..!!