கல்வடங்கம் காவிரி ஆற்றில் பரிகார பூஜைக்கு தினமும் பல பெண்கள் வருவதால், உடை மாற்றும் அறை மற்றும் கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்தில் உள்ள கோனேரிப்பட்டி அக்ரஹாரம் பகுதியில், கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரையில் பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருமாறு மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. இந்த மனுவை சேலம் மாவட்ட உபயோகிப்பாளர் உரிமைக் கழகத் தலைவர் திரு. சீ.கோ. இளமுருகன் அனுப்பியுள்ளார். கல்வடங்கத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு அங்காளம்மன் கோயில் உள்ளது. இங்கு, தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் பரிகார பூஜை செய்யும் முன் காவிரி ஆற்றில் குளிக்கிறார்கள்.
ஆனால், பெண்கள் உடை மாற்றுவதற்கு ஒரு அறை கூட இல்லை. இதனால் அவர்கள் மிகவும் தவிப்புடன் இருக்கிறார்கள். பூஜை முடிந்த பிறகு, துணி மற்றும் பல பொருட்கள் எல்லாம் ஆற்றுக்குள் வீசப்படுகின்றன. இது சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுகிறது. இதனால் பெண்களுக்கு என்று பிரத்யேகமாக உடை மாற்றும் அறை, கழிப்பறை, குப்பை தொட்டிகள், பாதுகாப்பான வாகன நிறுத்த இடம் ஆகியவை அமைத்து தர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பக்தர்கள் செலுத்தும் பரிகார பூஜை கட்டணத்தில் இருந்து நல்ல வருமானம் கிடைப்பதால், அந்த பணத்தை கொண்டு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : பட்டப்பகலில் பயங்கரம்!. சிறுமியிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி இளைஞரின் பகீர் செயல்!. வைரலாகும் வீடியோ!