ஆதரவற்றோர் பெரும் சான்றிதழில் யாரின் துணை இல்லாதவர்கள் என்பதற்கு குழந்தைகள் உறவினர்கள் என யாரும் இருக்க கூடாது என்ற அர்த்தம் கிடையாது. துணை இருக்க கூடாது என்பது மட்டுமே இதன் பொருள் என்று தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
கணவனால் கைவிடப்பட்டவர்கள், கணவனை இழந்தவர்களுக்கும் மாதந்தோறும் உதவித்தொகை கொடுத்து வருகிறது. இவ்வாறு இருக்கையில் ஒவ்வொரு உதவித்தொகை பெறுவதற்கும் அதற்குரிய ஆவணங்கள் கொடுப்பது கட்டாயம். இதில் கைம்பெண்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை பெற ஆதரவற்றோர் சான்றிதல் கொடுக்க வேண்டும். இந்த சான்று பெறுவதற்கு, நீங்கள் யாரின் துணை இல்லாமல் இருக்கவேண்டுமென தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.
இதனால் கனவானால் கை விடப்பட்டவர்கள் மேலும் விதவை பெண்கள் எங்களுக்கு குழந்தைகள் உள்ளனர். யாரும் இல்லாதவர்கள் தான் இதில் விண்ணப்பிக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பினர். இதனை விளக்கி கூறும் படி தமிழக அரசிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் கேட்டிருந்தார். அவரின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு தற்பொழுது விளக்கமளித்துள்ளது.
அதில்,ஆதரவற்றோர் பெரும் சான்றிதழில் யாரின் துணை இல்லாதவர்கள் என்பதற்கு குழந்தைகள் உறவினர்கள் என யாரும் இருக்க கூடாது என்ற அர்த்தம் கிடையாது. துணை இருக்க கூடாது என்பது மட்டுமே இதன் பொருள், மேலும் இதுகுறித்து சார்நிலை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுவதாகவும் கூறியுள்ளனர்.