நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கும், நடிகை விஜயலட்சுமிக்கும் இருக்கும் இடையே உள்ள விவகாரம் அனைவரும் அறிந்ததுதான். அவ்வப்போது சீமானை விமர்சித்து விஜயலட்சுமி வீடியோ வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு விஜயலட்சுமி, ”தமிழக மக்களுக்கு ஒரே விஷயத்திற்கு தெளிவு கொடுங்கள். அதன் பிறகு உங்களை முதல்வர் ஆக்கலாமா? வேண்டாமா? என அவங்க முடிவு செய்வார்கள். போன வருடம், மார்ச் மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரை, நீங்கள் எனது வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் போட்டுவிட்டு,
இது கயல்விழிக்கு தெரிய கூடாது. நாம் தமிழர் கட்சிக்கு தெரிய கூடாது. மீடியாவுக்கு தெரிய கூடாது. தமிழகத்தில் யாருக்குமே தெரிய கூடாது என்னிடம் சத்தியம் வாங்கிவிட்டு, அதன் பிறகு இரவும்,பகலுமாக என்னிடம் வீடியோ வாங்கிட்டு, டார்ச்சர் செய்தீங்களே, அது எல்லாம் தாங்க முடியாமல் தான் நான் வழக்கு போட்டேன். உங்க மனைவி முன் நின்று, பழக்கத்திற்கு இவள் தான் கிடைத்தாளா என எனது மனைவி கேட்டாள் என்று கெக்கே பிக்கென்னு சிரித்தீர்களே, இது தான் உங்களுடைய யோக்கியதை. இது எல்லாம் பார்த்த பிறகு, உங்களை முதல்வர் ஆக்க போறாங்களா?
ஒன்றும் இல்லை மிஸ்டர் சீமான், உங்களுக்கு முதலில் உண்மை பேசும் யோக்கியதையே கிடையாது. உங்கள மாதிரி துரோகிகள் கையில் எல்லாம், தமிழகம் என்னைக்கும் சிக்காது. சிக்கிறதுக்கு தமிழ் உணர்வாளர்கள் யாரும் விடவும் மாட்டார்கள். ஓகேவா, உங்களது முதல்வர் கனவை எல்லாம் இப்பொழுதே விட்டுவிடுங்கள். என்னுடைய கண்ணீர் விட, எங்க அக்காவோட கண்ணீர் என்னைக்கும் உங்களை வந்து சும்மாவிடாது” எனத் தெரிவித்துள்ளார்.