பிழைப்பை தேடி வந்த மக்களுக்கு உழைப்பை தந்து வாழ வைத்த நகரமான நம் சென்னை மாநகரம் உருவாக்கி 385 ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக வளர்ந்து வருகிறது. வான் உயர அடுக்குமாடி குடியிருப்புகள், ஷாப்பிங் மால்கள், மேம்பாலங்கள், மெட்ரோ ரயில் என காலத்திற்கேற்ப உயர்ந்து வந்தாலும் புயல், மழை, வெள்ளம் என இயற்கை சீற்றங்களையும் தாங்கிக்கொண்டு வந்தாரை வாழ வைப்பதில் என்றுமே கைவிட்டதில்லை. அப்படிப்பட்ட நம் சென்னைக்காக கொண்டாடப்படும் மெட்ராஸ் டே பற்றி தெரிந்துகொள்ளலாம்.
தமிழ்நாட்டின் தலைநகரம் என்பதாலும் இந்தியாவின் முன்னணி தொழில்நகரம் என்பதாலும் நம் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கும் நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்களுக்கும் சென்னை தான் புகலிடமாக இருக்கிறது. இதனால் தான் தமிழ்நாட்டிலேயே மிகச் சிறிய மாவட்டமாக இருந்தாலும் அதிகமக்கள் தொகை கொண்ட இடமாகவும் உள்ளது. தென்னிந்தியா மட்டும் இன்றி நாட்டின் முன்னணி சினிமா நகரமாகவும் இருக்கும் சென்னை மாநகரம் திரையுலகில் சாதிக்க விரும்புவோருக்கு கனவு நகரமாக ஜொலித்து வருகிறது. கோடிக்கணக்கான மக்களை சுமந்த போதும் நாள்தோறும் வெளிமாவட்டங்களில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் நாடிவரும் மக்களை ஒருபோதும் சென்னை மாநகரம் கைவிட்டதில்லை.
இப்படி வரும் இவர்களுக்கு தள்ளுவண்டி கடை முதல் பைவ் ஸ்டார் ஹோட்டல் வரை ஏதோ ஒரு வகையில் வாழ்வாதாரத்தை உறுதி செய்து கொண்டிருக்கிறது நமது சென்னை எல்லா ஊர் காரர்களுக்கும் சொந்த ஊராகவே மாறிப்போன சென்னை தொழில் ரீதியாகவும் உள்கட்டமைப்பு ரீதியாகவும் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது சுற்றுலா தளங்களிலும் தமிழ்நாட்டின் டாப் நகரமாக இருக்கும் சென்னை மாநகரில் மெரினா கடற்கரை ரிப்பன் பில்டிங் சென்ட்ரல் கோயம்பேடு மார்க்கெட் எழும்பூர் மியூசியம் என வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்களையும் கோவில்களையும் கொண்டு இருக்கிறது
இப்படி வரும் இவர்களுக்கு தள்ளுவண்டி கடை முதல் 5-ஸ்டார் ஹோட்டல் வரை ஏதோ ஒரு வகையில் வாழ்வாதாரத்தை உருதிபடுத்திகொண்டிருக்கிறது. எல்லா ஊர் காரர்களுக்கும் சொந்த ஊராகவே மாறிப்போன சென்னை தொழில் ரீதியாகவும் உள்கட்டமைப்பு ரீதியாகவும் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. சுற்றுலா தளங்களிலும் தமிழ்நாட்டின் டாப் நகரமாக இருக்கும் சென்னை மாநகரில் மெரினா கடற்கரை, ரிப்பன் பில்டிங், சென்ட்ரல், கோயம்பேடு மார்க்கெட், எழும்பூர் மியூசியம் என வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்களையும் கோவில்களையும் கொண்டு இருக்கிறது. பிரம்மாண்டமான ஷாப்பிங் மால்களைக் கொண்டாலும் தியாகராய நகர் ரங்கநாதன் தெரு, பாண்டி பஜார் உள்ளிட்ட இடங்களுக்கும் வெளிநாடுகளில் இருப்பவர்கள் கூட இங்கு ஷாப்பிங் வருவதுண்டு.
இப்படி சிறப்புகள் பல இருந்தாலும் வெயில். புயல். போக்குவரத்து நெரிசல், வெள்ளம் உள்ளிட்ட பிரச்சனைகளை அடிக்கடி சந்தித்தபோதும் சென்னையில் இருக்கும் மக்கள் என்றும் விட்டுக் கொடுப்பதே இல்லை. எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் வந்தவர்களை அரவணைக்கும் சென்னைக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் அதன் சிறப்புகளை நினைவுகூறும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் மெட்ராஸ் நகரம் உருவான நாளான ஆகஸ்ட் 22-ம் தேதியை மெட்ராஸ் நாளாக மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
Read More : அரசு மருத்துவரிடம் பல லட்சங்களை சுருட்டிய போலி சிபிஐ அதிகாரி..! போலீசாரிடம் சிக்கியது எப்படி..?