உடலையும், இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க தினமும் உடற்பயிற்சி செய்வது மிகவும் முக்கியம். ஆனால் உடற்பயிற்சியின் போது மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணம் என்ன என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.

கடந்த சில வருடங்களாக, உடற்பயிற்சி செய்யும் போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் ஏற்படும் செய்திகளை அடிக்கடி கேள்விப்பட்டு வருகிறோம். இதனால், உடற்பயிற்சி செய்யும் போதும் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்குமா என்ற கேள்வி மக்கள் மனதில் எழத் தொடங்கியுள்ளது. இதுதொடர்பான பல ஆய்வுகளிலும், உடற்பயிற்சி செய்வது மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது என்று கண்டறியப்பட்டது. இன்று நாம் எந்தெந்த நபர்கள் உடற்பயிற்சியைக் குறைக்க வேண்டும், ஆரோக்கியமான இதயத்திற்கு எத்தனை மணிநேரம் உடற்பயிற்சி அவசியம் என்பதைப் பற்றி விரிவாக தெரிந்துகொள்வோம்.

உடற்பயிற்சி செய்வது இதயத்தின் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இது ஒரு நல்ல அழுத்தம். இருப்பினும், இதய நோய் அல்லது அதிக கொழுப்பு உள்ளவர்கள் உடற்பயிற்சியின் போது அதிகரிக்கும் இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் காரணமாக அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில், ஒருவர் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும், ஆனால் மிகவும் கடினமான உடற்பயிற்சி உடலுக்கு நல்லதல்ல என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதய நோய், அதிக கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் சீரற்ற வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப் பழக்கம் உள்ளவர்கள் உடற்பயிற்சியின் போது சில விஷயங்களைப் பின்பற்ற வேண்டும். அவர்கள் உடற்பயிற்சி செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இருப்பினும், நீங்கள் அதிகமாக உடற்பயிற்சி செய்யும்போது மட்டுமே இந்த ஆபத்து ஏற்படுகிறது. குறிப்பாக திடீரென கடுமையான உடற்பயிற்சிகளைச் செய்யத் தொடங்குபவர்களுக்கு இதய நோய் ஆபத்து அதிகம்.

இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க ஒருவர் எத்தனை மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்?

அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் வழிகாட்டுதல்களின்படி, இதய நிபுணர்கள் ஒவ்வொரு வாரமும் குறைந்தது 150 நிமிடங்கள் தீவிர உடற்பயிற்சி செய்ய பரிந்துரைக்கின்றனர். தினமும் 75 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. இதில் விறுவிறுப்பான நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் பயிற்சி போன்ற செயல்பாடுகள் அடங்கும்.

உடற்பயிற்சி செய்யும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை :

நீங்கள் எப்போது உடற்பயிற்சி செய்ய தொடங்கினாலும், மெதுவாக செய்யவேண்டும் . உடனடியாக உங்கள் வேகத்தை அதிகரிக்கக்கூடாது. உங்களுக்கு மார்பு வலி, தலைச்சுற்றல் அல்லது மூச்சுத் திணறல் ஏற்பட்டால், உடனடியாக நிறுத்துங்கள். இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடற்பயிற்சியைத் தொடங்குவதற்கு முன்பு மருத்துவரை அணுக வேண்டும். உடற்பயிற்சி சரியாகச் செய்யும்போது, ​​அது இதயத்தை பலப்படுத்துகிறது, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் நீண்ட காலத்திற்கு மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது.