தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வலியுறுத்து தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், ஆளுநர் ரவியை சந்தித்து மனு அளித்துள்ளார்.
இதுதொடர்பாக தவெக-வின் பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் ஆளுநர் ரவியை சந்தித்து மனு அளித்துள்ளோம். அதில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்றும் அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தமிழகம் முழுவதிலும் அண்மையில் பெய்த பருவமழை மற்றும் பெஞ்சல் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை இந்த விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரண தொகையை மத்திய அரசு முழுமையாக வழங்கவேண்டும் என்றும் மனுவில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எங்கள் கோரிக்கைகளை கேட்ட ஆளுநர், அவற்றை பரிசீலிப்பதாக கூறினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Readmore: சேலம் மக்களே!. ஜன. 9ம் தேதி முதல் பொங்கல் பரிசு டோக்கன்!. 1,715 ரேஷன் கடைகள் மூலம் விநியோகம்!