சேலம் வாழப்பாடியில் ஆய்வின்போது, திருக்குறளுக்கு அர்த்தம் தெரியாமல் விழிப்பிதுங்கி நின்ற ஆசிரியர்களிடம் ஆட்சியர் பிருந்தா தேவி சரமாறி கேள்வி எழுப்பினார்.

சேலம் மாவட்டத்தில் ‘உங்களை தேடி உங்கள் ஊர் திட்டத்தின்’ கீழ் மலை கிராமங்களில் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி ஆய்வு செய்துவருகிறார். அதன் ஒருபகுதியாக, வாழப்பாடி அருகே அருநூத்துமலை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வளாகத்தில் அமர்ந்திருந்த மாணவர்களிடம் சில கேள்விகளை கேட்டார். அப்போது அங்கிருந்த மாணவி ஒருவரிடம் திருக்குறள் ஒன்றை கூற சொல்லி விளக்கம் கேட்டார். அந்த மாணவி சரியான விளக்கம் தெரியாததால் அமைதியாக நின்றுள்ளார்.

இதையடுத்து, “தமிழ் ஆசிரியர் யாருமா? அந்த குறளுக்கு நீங்களே விளக்கம் கொடுங்கள்” என கூறினார். ஆசிரியை கொடுத்த விளக்கத்தில் சிறிய பிழைகள் இருந்ததால், மீண்டும் ஆசிரியையிடம் அடுத்த கேள்வியை கேட்டு “சரியான விளக்கம் கொடுங்கள்” என கூறினார். இதனால் ஆட்சியர்கள் சற்று விழிப்பிதுங்கி நின்றனர். மேலும், 20, 25 வயதில் அரசு வேலை வாங்கி விட்டு 30 ஆண்டுகள் ஆர்வம் இல்லாமல் பணி செய்தால் எதற்கு அந்த வேலை?” என ஆட்சியர் பிருந்தா தேவி ஆசிரியர்களிடம் சரமாறி கேள்வி எழுப்பினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Readmore: குடிபோதையில் அரசுப் பள்ளிக்கு வந்த ஆசிரியர்..? மாணவர்களை கால் அழுத்த சொன்னதால் சஸ்பெண்ட்..!!