திருமணம் மீறிய உறவால் பெற்ற பிள்ளைகளை தவிக்கவிட்டு மனைவியை இழுத்துக்கொண்டு ஓடிய கள்ளக்காதலனை கொலை செய்ய முயன்ற கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரம் பகுதியை சேர்ந்தவர் சித்ரையன். டீ மாஸ்டரான இவர் கடந்த 8வருடங்களாக, ஓசூர் தாலுகா அலுவலகத்திற்கு முன்புள்ள டீ கடை பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது, அதே பகுதியில் துணிக்கடை வைத்திருந்த தர்னீஷ் என்பவரின் மனைவி செல்விக்கும் சித்ரையனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால், பெற்ற குழந்தைகள், கணவரை விட்டுவிட்டு அவ்வபோது செல்வி சித்ரையனுடன் சென்று குடித்தனம் நடத்திவந்துள்ளார். அதாவது, கடந்த ஜூலை மாதம் சித்தரையன் தனது வீட்டிற்கு செல்வியை அழைத்துசென்றதால், செல்வியின் கணவர் தர்னீஷ் ஓசூர் காவல் நிலையத்தில் தனது மனைவியை காணவில்லை என புகார் அளித்துள்ளார். இந்த நிலையில், சித்ரையன் வீட்டில் இருப்பதை அறிந்த தர்னீஷ், பேச்சுவார்த்தை நடத்தி செல்வியை அழைத்து வந்துள்ளார்.

இதையடுத்து, மீண்டும் கடந்த ஆகஸ்டு மாதம் செல்வி சித்ரையன் உடன் சென்றுள்ளார். இருவரும் வி.பாளையம் கிராமத்தில் தனியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த செல்வியின் கணவர் தர்னீஷ் தனது மனைவியை அனுப்பிவை என்று சித்திரையனுக்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, சம்பவத்தன்று கடந்த ஜனவரி 31ஆம் தேதி டீக்கடையில் வேலை செய்துவிட்டு சித்ரையன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிய போது டோல்கேட் அருகே செல்வியின் கணவர் மற்றும் அவரது உறவினர் நான்கு பேரும் சேர்ந்து சித்ரையனை வழிமறித்து கொலை செய்யும் நோக்கில் அரிவாளால் ஓட ஓட விரட்டி கை, கால்களை வெட்டி உள்ளனர். ரத்த வெள்ளத்தில் துடித்த சித்ரையனை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுதொடர்பாக 8 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தநிலையில், கீழ்குப்பம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது தாக்குதலுக்கு பயன்படுத்திய மாருதி கார் அவ்வழியாக வந்தது. போலீசாரை பார்த்தவுடன் தப்பிக்க முயன்ற செல்வியின் கணவர் மற்றும் அவரது உறவினர்களை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். விசாரணையில், தனது மனைவியை காதலித்து சித்ரையன் அழைத்துவந்து விட்டதாகவும் சித்திரையனுடன் தொலைப்பேசியில் எனது மனைவியை அனுப்பிவை எனக் கேட்டபோது அனுப்ப முடியாது என கடுமையாக தெரிவித்ததாகவும் எனது பிள்ளைகள் அம்மாவை பார்க்க வேண்டும் என தெரிவித்ததால் மனமுடைந்த தர்னீஷ் தனது உறவினரான ரஞ்சித் குமார், வெங்கடசாமி, மதன்குமார் ஆகியோருடன் சேர்ந்து சித்ரையன் என்பவரை கொலை செய்து விட்டு தனது மனைவியை அழைத்துச் செல்வதற்காக கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளார்.

Readmore: உடற்பயிற்சியின் போது மாரடைப்பு ஏற்படும் அபாயம் ஏன் அதிகரிக்கிறது? யாரெல்லாம் அதிக உடற்பயிற்சி செய்யக்கூடாது?.