காதலனுடன் தனிமையில் பேசிக்கொண்டிருந்த இளம்பெண்ணை, வீடியோ எடுத்து மிரட்டி உல்லாசமாக இருக்க வேண்டும் என்று மிரட்டல் விடுத்தல் கும்பலின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பகுதியை சேர்ந்தவர் இளம்பெண். கணவரை இழந்து தனியாக வசித்து வரும் பெண்ணுக்கும், உறவுக்கார ஆண் நண்பர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இந்தநிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் இந்த ஜோடி கிராமத்தின் அருகில் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதை நோட்டமிட்ட காந்திநகர் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் மற்றும் திலீபன் ஆகியோர் சேர்ந்து தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்துள்ளனர். இதையடுத்து, வீடியோவில் பதிவு செய்த காட்சியை அந்த ஜோடியிடம் இருவரிடம் காண்பித்து மிரட்டியுள்ளனர்.
தொடர்ந்து அவர்களிடம் ஆயிரம் ரூபாய் பணம் பறித்து சென்றுள்ளனர். இதையடுத்து வீட்டிற்கு சென்ற பெண்ணை தொடர்பு கொண்ட இருவரும், பணம் கேட்டு மிரட்டியதுடன், நாங்கள் கூப்பிடும் போது எங்களுடன் உல்லாசமாக இருக்கவேண்டும் என்று வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், ஜெகதீஸ் மற்றும் திலீபன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.