அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அரசு / அரசு உதவி பெறும் / தனியார் பள்ளிகளுக்கு 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இது அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள், தனியார் பள்ளிகள் இயக்குநர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு அட்டவணையை அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, 6-9ம் வகுப்புக்களுக்கான அரையாண்டு தேர்வுகள் அட்டவணைப்படி, டிச.9ம் தேதி திங்கட்கிழமை தமிழ் தேர்வும், டிச.10ம் தேதி(செவ்வாய்) விருப்ப மொழி, டிச.12ம் தேதி (வியாழன்)ஆங்கிலம், டிச.16(திங்கள்) கணிதம், டிச.18 (புதன்) உடற்கல்வி, டிச.20(வெள்ளி) அறிவியல், டிச.23(திங்கள்) சமூக அறிவியல் பாடங்களுக்கு தேர்வு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை பள்ளிக் கல்வித்துறையால் வெளியிடப்பட்டது. அதன்படி, 10ஆம் வகுப்பிற்கு டிசம்பர் 10ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 11 மற்றும் 12ஆம் வகுப்பிற்கு டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்படவுள்ளன.

இந்தநிலையில், டிசம்பர் 24 செவ்வாய் அன்று தொடங்கும் விடுமுறை ஜனவரி 1, 2025 புதன் வரை 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை கிடைக்கவுள்ளது. இன்னும் இரண்டு நாட்கள் (வியாழன், வெள்ளி) சேர்த்தால் மொத்தம் 11 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. விடுமுறை குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Readmore: புத்தக பிரியர்களே ரெடியா?. 2.5 லட்சம் புத்தகங்கள்!. இன்று ஆரம்பமாகிறது சேலத்தின் மாபெரும் புத்தகத் திருவிழா!.