ஜூன் 15ஆம் தேதி குரூப் 1 முதல்நிலை தேர்வு நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வணையம் மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றன. குரூப் 1, குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப் 4 போன்ற தேர்வுகள் நடத்தப்பட்டு, இதில் தேர்வாகும் பணியாளர்கள் தமிழ்நாடு அரசில் காலியாகவுள்ள பணிகளில் பணியமர்த்தப்படுகிறார்கள். இந்நிலையில் தான், குரூப் 1, 1 ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, குரூப் 1 தேர்வு மூலம் மொத்தம் 70 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 70 பணியிடங்கள் :
* துணை மாவட்ட ஆட்சியர் – 28 காலியிடங்கள்
* வணிக வரி உதவி ஆணையர் – 19 காலியிடங்கள்
* துணை காவல் கண்காணிப்பாளர் – 7 காலியிடங்கள்
* ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் – 7 காலியிடங்கள்
* தொழிலாளர் துறை உதவி ஆணையர் – 6 காலியிடங்கள்
* மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் – 3 காலியிடங்கள்
மேற்கண்ட பணிகளுக்கான தேர்வு 3 நிலைகளில் நடைபெறும். அதாவது முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவை நடைபெறும். இதில், ஜூன் 15ஆம் தேதி குரூப் 1 முதல்நிலை தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்வுக்கு இன்று முதல் ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி வரை https://tnpsc.gov.in/Home.aspx என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மே 25ஆம் தேதி முதல் ஜூன் 7ஆம் தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.