மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருநங்கைகள் படுத்து உருண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஹரி கிருஷ்ணன் என்ற திருநங்கை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வெளியே சென்ற அவர் நாகினி என்பவரை தாயாக தத்தெடுத்து வாழ்வதாகவும் கூறப்படுகிறது. மேலும்,

நாகினியின் உறவினர்கள் ரவுடிகளுடன் வந்து திருநங்கைக்கு கொலை மிரட்டல் விடுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த திருநங்கை தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி சேலம் மாவட்ட ஆட்ச்சியர் அலுவலகம் முன்பு 10ர்க்கும் மேற்பட்ட திருநங்கைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அங்கிருந்த காவல்த்துறையினர் அவர்களிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதாக குரிய பின்னர் அங்கிருந்து திருநங்கைகள் களைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Read More : திருமணம் வரை சென்ற கள்ளக்காதல்..!! வீடு புகுந்து வெளுத்து வாங்கிய பெண்கள்..!! நடந்தது என்ன..?