சில நேரங்களில் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து நீங்கள் பணம் எடுக்கும்போது, வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுவிடும். ஆனால், ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் வராது. இந்த அனுபவம் பலருக்கும் நடந்திருக்கும். இவ்வாறு நடக்கும் பொழுது, நமது வங்கி கணக்கில் 5 நாட்களுக்குள் மீண்டும் அந்த தொகை வந்துவிடும். அப்படி வராமல் போய்விட்டால், 5 நாட்களை தாண்டிய ஒவ்வொரு நாளுக்கும் ரூ.100 வீதம் இழப்பீட்டு தொகை வழங்கப்படும்.

ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து உங்கள் பணம் கையில் வராமல் போனால் என்ன செய்ய வேண்டும்..?

* முதலில் நீங்கள் ஏடிஎம் இயந்திரத்தின் எண்ணை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* அடுத்து ஏடிஎம் பரிவர்த்தனை ரசீதை எடுத்து வைக்க வேண்டும். சில நேரங்களில் ரசீது வராது. அப்போது உங்கள் மொபைல் நம்பருக்கு வந்த பரிவர்த்தனை தொடர்பான குறுஞ்செய்தியைக் காட்ட வேண்டும்.

* பிறகு, உங்களுடைய வங்கிக்கு உடனடியாக கஸ்டமர் கேர் மூலம் புகாரளிக்க வேண்டும்.

* உங்களுடைய அக்கவுண்டில் இருந்து பணம் எடுக்கப்பட்டது என்று தெரிந்தால் மட்டுமே, உங்கள் வங்கிக் கணக்கிற்கு மீண்டும் அதனை செலுத்த முயல்வார்கள்.

* நீங்கள் ஆதாரங்கலை வழங்கிய பிறகு குறிப்பிட்ட காலத்திற்குள் தொகையைத் திருப்பித் தரவில்லை என்றால், நீங்கள் வங்கியின் உள் ஒம்புட்ஸ்மேன் அதிகாரியை அணுக வேண்டும்.

* ஒவ்வொரு வங்கிக்கும் ஒரு பிரத்யேக அதிகாரி மற்றும் உள் ஒம்புட்ஸ்மேன் அலுவலகம் உள்ளது. வங்கிக்கு எதிராக புகாரளிக்க அந்த வங்கியின் கீழ் உள்ள குறைதீர்ப்பாளரின் நோடல் அதிகாரியை அணுகலாம்.

* அங்கு உங்களுக்கு பலன் கிடைக்கவில்லை என்றால், நீங்கள் இணையதளம் மூலமாக இந்தியன் ரிசர்வ் வங்கியின் ஒம்புட்ஸ்மேன் அமைப்பை தொடர்பு கொள்ளலாம். இதன் மூலம் கண்டிப்பாக வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட உங்கள் பணம், மீண்டும் வங்கி கணக்கிருக்கு வந்து சேரும்.

Read More :

திடீரென அந்நியன், அம்பியாக மாறும் சீமான்!. அவருக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியது இல்லை!. பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்!

டீ, பிஸ்கட் முதல் ஷாம்பு வரை!. உயரப்போகுது விலை!. வெளியான முக்கிய தகவல்!

கேரள ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழர்கள்!. சேலத்தை சேர்ந்த 4 பேருக்கு நிதியுதவி!. முதல்வர் அறிவிப்பு!