தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் எத்தனை மணிக்கு பள்ளிக்கு வரவேண்டும்? பள்ளியின் வேலை நேரம் என்ன? என்பன குறித்த கேள்விகளுக்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் விவரங்கள் பெறப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் மலைக் கொழுந்தன் என்பவர், சில கேள்விகளை முன்வைத்து மனு அளித்திருந்தார். அதற்கு மாவட்டக் கல்வி அலுவலர் பதில் அளித்துள்ளார்.

* காலை 9.00 மணி முதல் மாலை 4.10 மணி வரை தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் வேலை நேரம் செயல்படுகிறது.

* தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் காலை 8.45 மணிக்கும், ஆசிரியர்கள் காலை 9.00 மணிக்கும் பள்ளிக்கு வருகை தர வேண்டும். (காலை உணவுத் திட்டத்தால் தற்போது நேரம் மாற்றப்பட்டு உள்ளது)

மேல்நிலைப் பள்ளிகளின் வேலை நேரம் என்ன..?

* உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் காலை 9.00 மணிக்கும் உடற்கல்வி ஆசிரியர்கள் காலை 8.45 மணிக்கும் பள்ளிக்கு வர வேண்டும்.

* உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் வேலை நேரம் காலை 9.20 மணி முதல் மாலை 4.20 வரையாகும்.

* உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் காலை 9.15 மணிக்கு பள்ளிக்கு வருகை தர வேண்டும்.

* அதேபோல், உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் கழகம், ஆசிரியர்கள் குழுவின் தீர்மானம் மற்றும் உயர் அலுவலர்களின் ஒப்புதல் பெற்று வேலை நேரத்தை உள்ளூர் சூழல்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை..!! மீறினால் கடும் நடவடிக்கை..!! வெளியான முக்கிய உத்தரவு..!!