ஈரோட்டில் குழந்தைகளுக்கான நினைவாற்றல் செய்யும் பிரிவில் 130 புகைப்படங்களை சரியாக தேர்வு செய்து 3 மாத ஆண் குழந்தை சாதனை படைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் சுனில் ஹரி பாஸ்கர் – லோகித் சோனாலி தம்பதி. இவர்களுக்கு ஆதிரன் என்கிற 3 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில், தனது மகனின் நினைவாற்றலை மேம்படுத்தும் நோக்கில் சோனாலி, கடந்த 2 மாதத்தில் இருந்து, காய்கறிகள், பழங்கள், விலங்குகள் அடங்கிய வெள்ளை, கருப்பு நிற புகைப்படங்களை காண்பித்து பயிற்சி அளித்து வந்துள்ளார்.

இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் தேடியபோது ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 4 மாத பெண் குழந்தை புகைப்படங்களை சரியாக சொல்லும் பிரிவில் நோபல் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருப்பதை சோனாலி பார்த்துள்ளார். அதேபோல், தனது மகன் ஆதிரனையும் பழக்கி வந்துள்ளார். இதன் விளைவாக, ஒரு நெகிழ்ச்சி நிகழ்வு நடந்ததை கண்டு ஆச்சரியமடைந்த சோனாலியும், ஆதிரனையும் வீடியோ எடுத்து நோபல் குழுவினருக்கு அனுப்பியுள்ளார்.

இதனை ஆய்வு செய்த நோபல் சாதனை குழுவினர் 3 மாத ஆண் குழந்தை ஆதிரன் பழங்கள், காய்கறிகள், எண், வண்ணம் மற்றும் வடிவம் அடங்கிய 130 புகைப்பட அட்டைகளை சரியாக காண்பித்ததால், சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டி உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Readmore : எகிறும் விலை!. திருச்செங்கோட்டில் ரூ.120 வரை விற்பனையான கொப்பரை தேங்காய்!. விவசாயிகள் மகிழ்ச்சி!