தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு நாளை (அக்.30) அரை நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடப்பாண்டுக்கான தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி வியாழக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இதனால், அடுத்த நாளான வெள்ளி அன்று அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு ஊழியர்களும் மாணவர்களும் கோரிக்கை விடுத்தனர். சொந்த ஊர்களுக்குச் சென்று வர ஏதுவாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்து இருந்தனர். இதை அடுத்து, தமிழகம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு நவம்பர் 1-ம் தேதி விடுமுறையை தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்தநிலையில், தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நாளை (30.10.2024) முற்பகல் மட்டும் செயல்படும், பிற்பகல் அரை நாள் விடுமுறை அறிவித்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Readmore: புதிய உச்சத்தில் எகிறிய தங்கம் விலை!. சவரன் ரூ.59000-ஐ எட்டியது!. நகைப்பிரியர்கள் ஷாக்!