எழுத்தாளரும், பிரபல நடிகருமான வேல ராமமூர்த்தியின் பேத்தி திருமணம் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற நிலையில், திருமணம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியா மட்டுமின்றி இன்று உலகம் முழுவதும் பலரையும் கவனம் ஈர்த்துள்ள நிகழ்வு என்றால் அது ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணம் எனலாம். உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு பிரம்மாண்ட முறையில் அதிக பொருட்செலவிலும் நடத்தப்பட்டது.

இந்நிலையில், பிரபல எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தியின் பேத்தி வைஷ்ணவி மற்றும் இன்டஸ்ட்ரியலிஸ்ட் ஆர்.எஸ்.முருகனின் மகன் விஜய ராகுலுக்கும் நடந்த திருமணம் தான் தற்போது ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் ஹார்ட் டாப்பிக்காக உள்ளது. இலக்கிய வட்டாரத்தில் பிரபலமாக இருந்தவர் வேல ராமமூர்த்தி. இவர், கிடாரி, கொம்பன் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர பாத்திரங்களில் நடித்ததன் மூலம் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். மேலும், சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் நடித்ததன் மூலம் சின்னத்திரையிலும் இவர் கால் பதித்தார்.

இந்நிலையில், வேல ராமமூர்த்தியுடைய பேத்தியின் திருமணம் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்றது. இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இத்திருமணம் பலரும் ஆச்சரியப்படும் வகையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. குறிப்பாக, திருமணத்தின் போது மணமக்கள் மலர்களால் ஆன மாலைகளை அணிந்திருப்பதை பார்த்திருப்போம். ஆனால், இந்த திருமணத்தில் மணமகன் மற்று மணமகள் ஆகியோர் தங்கத்தால் செய்யப்பட்ட மாலையை அணிந்துள்ளனர்.

இதேபோல், திருமணத்திற்காக மணமகள் அணிந்திருந்த உடைகள் மட்டும் ரூ. 10 லட்சத்திற்கு மேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது. அதன்படி, மணமகளின் புடவை ரூ. 8 லட்சம் எனவும், அவர் அணிந்திருந்த பிளவுஸ் ரூ. 3 லட்சம் எனவும் கூறப்படுகிறது. அதேபோல், திருமணத்தில் மணமகள் கிட்டத்தட்ட 600 சவரன் நகையை அணிந்துள்ளார். மணமகளுக்கு சீராக 300 சவரன் நகைகள் வழங்கப்பட்டதாகவும் சுற்றுவட்டார பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும், திருமணத்தில் மாதம்பட்டி ரங்கராஜின் சமையலும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பிரபலங்களின் கச்சேரியும் இடம்பெற்றுள்ளது.

இத்திருமணத்திற்காக நெல்லை ட்ரேட் சென்டரில் பல லட்ச ரூபாய் செலவு செய்து மண்டபம் போன்று செட் அமைத்துள்ளனர். இதில் மணமகன் வீட்டார் நெல்லையைச் சேர்ந்த தொழிலதிபர் ஆர்.எஸ். முருகன் குடும்பத்தினர் ஆவர். வெள்ளித்திரையில் தொடர்ந்து நடித்து வரும் வேல ராமமூர்த்தி, சின்னத்திரையில் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Readmore: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கலந்தாய்வு எப்போது?. வெளியான முக்கிய அறிவிப்பு!.