கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி, காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 17,586 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 29,850 கன அடியாக அதிகரித்துள்ளது.

தற்போது, அணையின் நீர்மட்டம் 100.01 அடியாகவும், நீர் இருப்பு 64.85 டிஎம்சியாகவும் உள்ளது. இந்த ஆண்டில் 2-வது முறையாக அணை 100 அடியை எட்டி சாதனை படைத்துள்ளது. கடந்த 88 நாட்களுக்கு பிறகு, அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Readmore:மக்களே உஷார்!. ரேஷன் கார்டு காலக்கெடு முடியப்போகுது!. இதை பண்ணலனா பொருட்கள் வாங்க முடியாது!.