ஹெல்மெட் அணிந்தும், முறையாக அணியாவில்லை என்றால் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பைக் ஓட்டுவதற்கு ஹெல்மெட் அணிவது சட்டப்பூர்வமான தேவை மட்டுமல்ல, பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானது. இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் என்பது உயிர்க்கவசமாகச் செயல்படுகிறது. இதன் காரணமாக, இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசத்தைக் கட்டாயம் அணிய வேண்டும் என போக்குவரத்து போலீசார் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், பலரும் முடி கொட்டும், அன்னிசையாக உள்ளது என்று பல்வேறு காரணங்களைச் சொல்லிக்கொண்டு தலைக்கவசத்தை அணிய மறுக்கின்றனர்.

சிலர் ஹெல்மெட் அணிந்தாலும், முறையாக அணிவதில்லை. இதனை கருத்தில் கொண்டு பைக் ஓட்டுபவர் தலைக்கவசம் அணிந்திருந்தாலும், அது திறந்திருந்தால் ரூ.1000 அபராதமும், தலைக்கவசத்தை இறுக்கமாக கட்டாவிட்டாலும் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் இருசக்கர வாகனம் ஓட்டும்போது ISI முத்திரை பதித்த ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். இல்லையென்றால் அதற்கும் மோட்டார் வாகன சட்ட பிரிவு 194D MVA-இன் கீழ் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். எனவே போக்குவரத்து காவல்துறை விதித்துள்ள அனைத்து தகவல்களும் முறையாக தெரிந்து கொண்டால் இந்த அபராதத்தை தவிர்க்க முடியும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Readmore: களைகட்டிய வார விடுமுறை!. பூலாம்பட்டிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!. படகு சவாரி செய்து உற்சாகம்!.