உங்கள் நிலம் வேறு ஒருவர் பெயரில் பட்டா இருக்கிறது என்றால் அதை எப்படி சரி செய்வது? என்பது குறித்து பார்க்கலாம். பொதுவாக நாம் ஒரு நிலம் வாங்க வேண்டும் என்றாலோ அல்லது விற்க வேண்டும் என்றாலோ அதற்கு பத்திரம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. ஏனென்றால் பத்திரம் இருந்தால் மட்டுமே தான் மேலே சொல்லப்பட்டுள்ள இரண்டினையும் செய்ய முடியும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பத்திரம் யாருடைய பெயரில் இருக்கிறது என்பதை நாம் அவசியமாக தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பத்திரம் என்பது ஒரு நிலத்தினை குறிக்கும் மிகவும் முக்கியமான ஆவணம் ஆகும். அந்த வகையில் நம்முடைய நிலத்தினை வேறு ஒருவர் உரிமை கொண்டாட முடியாது என்றும் என் நிலம் எனக்கு மட்டுமே உரிமை என்பதையும் சுட்டி காட்டுவதற்கு இன்றையமையாத ஒன்றாக உள்ளது. இதுவே பத்திரம் எனப்படும். அந்தவகையில், பல ஆண்டுகளாக ஒரு நிலத்தை யாரும் உரிமை கோராத நிலையில், அதை புறம்போக்கு நிலமாக கருதி மக்கள் ஆக்கிரமிக்கின்றனர். அப்படி ஆக்கிரமித்தவர்கள் அதற்கான பட்டாவையும் பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால், அதற்கு கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. ஏனென்றால், அரசு துறை நிலத்தை போல் தனியார் நிலத்தை ஆக்கிரமித்து பட்டா பெறுவது என்பது சாதாரண விஷயமல்ல. ஆனாலும் அதை சிலர் செய்கின்றனர்.

தனியார் பெயரில் பட்டா வழங்கப்பட்ட நிலத்தை அவர் தலையீடு இன்றி, வேறு ஒருவர் தொடர்ந்து 14 ஆண்டுகள் அந்த நிலத்தை எந்தவித வாடகையும செலுத்தாமல் பயன்படுத்தி வந்ததற்காக ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும். அத்துடன் அந்த நிலத்துக்கான வரிகளை ஆக்கிரமித்தவர்கள் செலுத்தி இருந்தால், அதற்கான ஆதாரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். அப்படி தாக்கல் செய்த ஆவணங்களின் அடிப்படையில் பட்டா வழங்க வேண்டிய வருவாய்துறையினர், முதலில் வருவாய் ஆவணங்களின் அடிப்படையில் உண்மையான உரிமையாளரை கண்டுபிடித்து அவருக்கு நோட்டீஸ் அனுப்புவார்கள். அதாவது இன்னார் உங்களின் நிலத்திற்கு பட்டா கேட்கிறார், கொடுக்கலாமா என்று நோட்டீஸ் அனுப்புவார்கள். அதற்கு பதில் அளிக்காமல், எந்த ஆட்சேபனையும் தெரிவிக்காமல் உரிமையாளர் இருந்தால், ஆக்கிரமிப்பாளர் பெயருக்கு பட்டா வழங்கப்படும்.

அதேநேரம் உண்மையான உரிமையாளர் காணாமல் போய்விட்டார். எங்கு இருக்கிறார். எப்படி இருக்கிறார் என்று தெரியாத நிலையை ஆக்கிரமிப்பாளர் தகுந்த ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். அதேநேரம் உண்மையான உரிமையாளருக்கு சட்ட ரீதியாக நிலத்தை காப்பாற்றிக்கொள்ள அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்படும். ஆனால் வாய்ப்புகளை தவறவிட்டால் ஆக்கிரமிப்பாளர் பட்டாவினை பெற்றுவிடுவார். நீதிமன்ற ஆணைகள் மூலமாகவும் ஒருவர் காணாமல் போய்விட்டார் என்பதை நிரூபித்து பட்டா பெற முடியும் என்பதால் நிச்சயம் வீட்டு மனை வைத்திருப்போர் கவனமாக இருக்க வேண்டும்.

எனவே உங்கள் நிலத்தை முறையாக பராமரித்து வாருங்கள். யாராவது ஆக்கிரமிக்கிறார்களா என்பதை அறிய மாதம் அல்லது 3 மாதத்திற்கு ஒருமுறையாவது உங்கள் நிலத்தை போய் பார்க்க வேண்டும். உங்கள் இடத்தை சுற்றி வேலிகளை கண்டிப்பாக போடுங்கள். உங்கள் பத்திரங்களின் நகலை யாரிடமும் கொடுக்காதீர்கள். அதை வைத்து போலி பத்திரங்களை தயாரிக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் பெயரில் பத்திரம் இருந்து பட்டா இல்லை என்றால், உடனே பட்டா மாற்றம் செய்யுங்கள். பட்டா மாற்றம் செய்யாவிட்டால் சிக்கல் ஆகிவிடும்.

Readmore: திடீரென சீமான் வீட்டை முற்றுகையிட்டு கார் கண்ணாடியை அடித்து நொறுக்கிய த.பெ.தி.க..!! என்ன காரணம்..? போலீஸ் குவிப்பால் பரபரப்பு..!!