தற்போது வரை பெரும்பாலான ஊழியர்களுக்கு அவர்களின் EPF கணக்கில் பணம் சரியான நேரத்தில் டெபாசிட் செய்யப்படுகிறதா இல்லையா என்பது தெரியாது. சில முறைகள் மூலம் ஊழியர்கள் தங்கள் பிஎஃப் இருப்பு பற்றிய தகவல்களைப் பெற முடியும். ஆனால் இதுவரை பிஎஃப் டெபாசிட் நிலையைப் பற்றிய தகவல்களை உண்மையான நேரத்தில் வழங்கக்கூடிய அத்தகைய அமைப்பு எதுவும் இல்லை.

இந்தநிலையில், EPF கணக்கில் மிஸ்டு கால் மூலமாக பேலன்ஸ் இருப்பை தெரிந்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்குடன் செல்போன் நம்பரை இணைத்திருப்பது மிகவும் அவசியம். அதன்பிறகு இணைக்கப்பட்ட செல்போனிலிருந்து 9966044425 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுக்க வேண்டும். மிஸ்ட் கால் கொடுக்கும் போது தானாகவே அழைப்பு சென்று கட்டாகிவிடும். பின்னர் சிறிது நேரத்தில் சம்பந்தப்பட்ட நம்பருக்கு ‌EPF இருப்பு குறித்த குறுந்தகவல் வந்துவிடும்.

இதேபோன்று இபிஎப்ஓ இருப்பை எஸ்எம்எஸ் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். அதாவது இபிஎப் கணக்கில் பதிவு செய்யப்பட்ட நம்பரில் இருந்து 7738299899 என்ற நம்பருக்கு EPFOHO UAN என டைப் செய்து ‌ மெசேஜ் அனுப்ப வேண்டும். அதன்பிறகு உங்கள் இபிஎஃப் கணக்கில் எவ்வளவு இருப்பு இருக்கிறது என்ற விவரம் உங்கள் நம்பருக்கு எஸ்எம்எஸ் வாயிலாக அனுப்பப்படும். மேலும் இந்த இரு முறைகளை பயன்படுத்தி நீங்கள் epf கணக்கில் எவ்வளவு இருப்பு இருக்கிறது என்று விவரத்தை அறிந்து கொள்ளலாம்.

Readmore: இனி இவர்களுக்கும் விவசாய நிலம்..!! ரூ.5 லட்சம் மானியம்..!! ஆனால் விண்ணப்பிக்க இதெல்லாம் கட்டாயம்..!!