சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து சேலம் வந்தார். அவருக்கு மேச்சேரியில் விவசாயிகள் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. பின்னர் சேலத்தில் நடந்த கட்சி நிர்வாகிகள் இல்ல திருமண விழாவில் பங்கேற்றார். நேற்றுமுன்தினம் காலை மேச்சேரிக்கு சென்று வந்தார்.
இதனை தொடர்ந்து அவருக்கு நேற்றுமுன்தினம் மதியத்திற்கு மேல் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கால் வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், இதனால் அவர் கட்சியினரை சந்திக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதேபோல், நேற்றும் அவரை பார்த்து திருமணத்திற்கான அழைப்பிதழ் வைப்பதற்காக கட்சியினர் வந்தனர். அப்போதும் உடல் நிலை சரியில்லை என கூறி திருப்பி அனுப்பி வைத்துவிட்டனர். இதற்கிடையில் நேற்று மாலை 3 மணிக்கு சேலத்தில் இருந்து விமானம் மூலம் அவர் சென்னை புறப்பட்டு சென்றார். இதனால் அதிமுக தொண்டர்கள் மிகுந்த வருத்தமடைந்தனர்.
Readmore: தேனீ வளர்ப்பில் நல்ல லாபம்..!! இலவச பயிற்சியும் உண்டு..!! எங்கு தெரியுமா..? விவரம் இதோ..!!