நடிகர் விஜய்யிடம் நிறைய விலையுயர்ந்த கார்கள் இருப்பது அனைவருக்குமே தெரியும். இந்நிலையில், மேலும் ஒரு புதிய காரை அவர் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. அதனை உறுதி செய்யும் விதமாக, அந்தக் கார் விஜய்யின் வீட்டில் இருந்து வெளியே வரும் போது எடுக்கப்பட்ட காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 2012இல் ரோல்ஸ் ராய்ஸ் கோஷ்ட் கார் ஒன்றை விஜய் வாங்கியிருந்தார். ஆனால், அந்தக் காருக்கு முறையாக வரி செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. இதையடுத்து, சில வாரங்களுக்கு முன்பு அந்தக் காரை விஜய் விற்பனை செய்யவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.
அந்த ரோல்ஸ் ராய்ஸை விற்பனை செய்ததைத் தொடர்ந்து புதிய சொகுசு கார் ஒன்றை தற்போது விஜய் வாங்கியுள்ளார். அது ‘லெக்சஸ் LM 350h’ எம்பிவி கார் தான். சொகுசு எனப் பெயரில் மட்டும் இல்லாமல், உண்மையிலேயே இது சொகுசு கார் தான். இந்தியாவில் தற்போது மிகவும் அதிக விலையில் விற்பனை செய்யப்படும் எம்பிவி என்றால் அது இந்த லெக்சஸ் LM 350h தான். இது டொயோட்டா நிறுவனத்தின் சொகுசு கார் பிராண்டு ஆகும்.
இந்தியாவில் இந்தக் லெக்சஸ் LM 350h எம்பிவி காரானது ரூ.2 கோடி எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்குகிறது. ஆனால், நடிகர் விஜய் வாங்கியிருப்பதாக எதிர்பார்க்கப்படும் 4 சீட்டர் வேரியன்டானது ரூ.2.50 கோடி எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Read More : சாலை விரிவாக்கம் என்ற பெயரில் அனுமதியின்றி அகற்றப்பட்ட பனைமரங்கள்..!! கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்..!!