சேலம் உருக்காலை உள்பட தென்னிந்தியாவில் உள்ள 3 முக்கிய உருக்காலைகளை விரிவாக்கம் செய்வது குறித்து டெல்லியில் ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளதாக மத்திய எஃகுத் துறை அமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
நலிவடைந்துள்ள சேலம் உருக்காலைக்கு புத்துயிரூட்டி வேலை வாய்ப்பை பெருகுவது குறித்து மத்திய அமைச்சர் குமாரசாமி ஆய்வு மேற்கொண்டார். தனி விமானம் மூலம் திருச்சி வந்த ஒன்றிய அமைச்சர் குமாரசாமி, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அவருக்கு கோவில் அர்ச்சகர்கள் மரியாதை அளித்தனர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவிரி விவகாரத்தில் இரு மாநில விவசாயிகளும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து பேசுகையில், “மழைப்பொழிவு இருந்தால், தமிழ்நாடு மற்றும் கர்நாடக விவசாயிகளுக்கு இடையே எந்த பிரச்சனையும் இருக்காது.
மழை பெய்யாத வறட்சி காலங்களில் சட்டப்படி காவிரி நீர் பங்கீடு உதவாது. Give and Take Policy தான் காவிரி பிரச்சினைக்கு ஒரே தீர்வு. காவிரி விவகாரத்தில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது. நீர்ப் பங்கீடு குறித்து இரு மாநிலமும் சுமூகமாக பேசி தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,”என்றார். இதையடுத்து, சேலம் உருக்காலையை பார்வையிட்டப்பின் பேசிய அவர், சேலம் உருக்காலைக்கு புத்துயிர் ஊட்டுவது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக கூறினார். அதன் மூலம் மீண்டும் அங்கு வேலை வாய்ப்பை பெருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் உருக்காலையை விரிவாக்கம் செய்ய எவ்வளவு முதலீடு தேவைப்படும், முதலீடு செய்யப்படும் பணத்தை எவ்வாறு திரும்ப எடுப்பது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக கூறினார்.
Readmore: ஈரோட்டில் திடீரென தீப்பிடித்த சரக்கு லாரி!. பல லட்சம் மதிப்பிலான பேட்டரிகள் எரிந்து சேதம்!