நிர்வாண புகைப்படங்களை வைத்து மிரட்டி உல்லாசத்திற்கு அழைத்ததால் மனமுடைந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 25 வயது இளம்பெண் ஒருவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 6 ஆண்டுகளாக தனது தாத்தா பாட்டி வீட்டில் வசித்து வரும் இவர், ஓய்வு நாட்களில் தனது மாமா வீட்டிற்கு செல்வது வழக்கம். இந்தநிலையில், கடந்த 12ம் தேதி அன்று ஹோட்டலுக்கு சென்ற இளம்பெண் திடீரென அறையில் தீவைத்து கொளுத்திக்கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஹோட்டல் ஊழியர்கள் இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். இருப்பினும், அப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து பெண்ணின் தாயாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அங்கு சென்ற தாயாரிடம் இளம்பெண்ணின் நண்பர் என்று கூறிய நபர், அதிர்ச்சி தகவல்களை கூறியுள்ளார். அதாவது, பிரவீன் என்ற நபர் இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படங்களை பென் டிரைவ் மற்றும் செல்போனில் சேமித்து வைத்து அந்த பெண்ணை மிரட்டி வந்ததாகவும், இதுமட்டுமல்லாமல் தனது ஆசைக்கு இணங்கவேண்டும் என்று டார்ச்சர் செய்துள்ளார். இல்லையென்றால் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றிவிடுவேன் என்று மிரட்டி வந்துள்ளார். இதனால் மன உளச்சலில் இருந்த அப்பெண், தன்னிடம் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கூறினார் என்று நண்பர் தெரிவித்துள்ளார். சம்பவத்தன்று குண்டலஹள்ளி மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் “தங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக” சந்தித்ததாகவும். அங்கு வைத்து இளம்பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதால் இளம்பெண் உடலில் மண்ணெணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, இளம்பெண்ணின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாமா பிரவீன், பெண்ணின் செல்போனில் நிர்வாண புகைப்படங்களை ரகசியமாக பதிவு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பிரவீனை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அவனிடம் இருந்த பென் டிரைவ் மற்றும் செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.