சேலத்தில் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அருகே திப்பம்பட்டியை சேர்ந்தவர் சென்னன் (65). இவரது மகள் சுதா. இந்தநிலையில், மகள் மற்றும் பேரனை அழைத்துக்கொண்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது, மல்லூர் பகுதியில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு பேருந்தில் திருச்சி செல்ல இருந்துள்ளனர். அப்போது, தேசிய நெடுஞ்சாலையை இருசக்கர வாகனம் மூலம் கடக்க முயன்றதாகவும், அப்போது, நாமக்கல் நோக்கி பருப்பு லோடு ஏற்றிக்கொண்டுச் சென்ற லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது.

இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த 3 சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மல்லூர் காவல் நிலைய போலீசார், விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநர் சுந்தரராஜன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Readmore: சங்ககிரி அருகே சூட்கேசில் இளம்பெண் உடல்!. சிதைந்த நிலையில் கண்டெடுப்பு!. போலீசார் தீவிர விசாரணை!