கார்த்திகை மாதம் தொடங்கினாலே பல திருவிழாக்கள், ஆன்மிக நிகழ்வுகள் என சிறப்புகளைக் கொண்ட மாதம். இறைவனை தீபத்தின் வழியாக வழிபடும் மாதமாக கார்த்திகை மாதம் விளங்குகிறது. கார்த்திகை பிறந்தாளே ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் மாலையிட தொடங்குவர். சிவபெருமான், முருகனை வழிபாடு செய்யவும் உகந்த மாதம் தான் இந்த கார்த்திகை மாதம். குறிப்பாக இந்த வருடத்தின் கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் வருகிறது மேலும் சிறப்பு வாய்ந்தது ஆகும்.அந்த வகையில் இந்த வருடத்தின் கார்த்திகை மாதம் இன்று( நவம்பர் 16)துவங்கி, டிசம்பர் 15ம் தேதி வரை உள்ளது.

இந்நிலையில் கார்த்திகை முதல் நாள் அன்று திருமணம் வரம் கிடைக்க, வேலை வாய்ப்பு பெற, குழந்தை பாக்கியம் கிடைக்க, கணவன் மனைவி பிரிவு நீங்க, வீடு, வாகனம் வாங்க என பல்வேறு பிரச்சனைகளுக்கு முருகனை வழிபட்டு எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும் என்ன பரிகாரம் செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம். வேலைவாய்ப்பு கிடைக்காதவர்கள் இந்த கார்த்திகை முதல் நாளில் முருகன் சன்னதியில் 3 அகல்விளக்கு ஏற்றி, 9 முறை சுற்றி வந்து முருகனை பிராத்தனை செய்ய வேண்டும்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் தம்பதியாக சேர்ந்து முருகன் சன்னதிக்கு சென்று 3 விளக்கேற்றி,6 முறை சுற்றி வந்து பிராத்தனை செய்ய வேண்டும். திருமண தடை நீங்க ஆண்கள் 5 விளக்கு ஏற்றி கோவிலை 9 முறை சுற்றி வேண்டி கொள்ள வேண்டும். பெண்கள் 1 விளக்கு ஏற்றி திருமண யோகம் என்ற ஒரு பிராத்தனை மட்டும் வேண்டிக் கொண்டு 9 முறை சுற்றி வர வேண்டும். வழிபாடு செய்த பின்னர் நேராக வீட்டுக்கு சென்று 1 டம்ளர் தண்ணீர் குடித்து பிராத்தனை நிறைவு செய்யலாம். மேலும் வீடு, வாகனம் போன்றவை வாங்க 3 அகல்விளக்கு முருகன் சன்னதிக்கு அருகில் ஏற்றி ஓம் சரவண நமோ நம என்று உச்சரித்து வேண்டிக்கொண்டால் நினைத்த காரியங்கள் விரைவில் நடக்கும்.

Readmore: நெருங்கும் பொங்கல் பண்டிகை!. இலவச வேட்டி, சேலை திட்டம்!. இந்த தேதி வரை தான் டைம்!. அமைச்சர் வெளியிட்ட அப்டேட்!