ஆடிப்பெருக்கை முன்னிட்டு, இன்று அனைத்து சார் – பதிவாளர் அலுவலகங்களும் வழக்கம் போல செயல்படும் என பத்திரப்பதிவுத்துறை அறிவித்துள்ளது.
பொதுமக்கள் அசையா சொத்து குறித்த ஆவணப் பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள மக்கள் விரும்புகின்றனர். இதனால், ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுவதை ஒட்டி, இன்று சனிக்கிழமை அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களும் வழக்கம் போல செயல்படும்.
இன்று காலை 10 மணி முதல் பத்திரப்பதிவு பணிகளை மேற்கொள்ள வேண்டும். விடுமுறை நாளில் பத்திரப்பதிவு மேற்கொள்வதற்கான கூடுதல் கட்டணத்தை சேர்த்து வசூலிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்பை அளிக்க, சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலர்களும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Read More : தமிழ்நாட்டில் 1,369 பேருக்கு எலி காய்ச்சல்..!! எப்படி பரவுகிறது..? சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்..!!