ஷங்கர் இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் கமல்ஹாசனுக்கு விக்ரம் படம் போல வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஸ்வரூபம் 2 போல படுதோல்வியை சந்தித்தது. இதுவரை எந்தவொரு கமல்ஹாசன் படமும் இந்தளவுக்கு ட்ரோல் ஆகியிருக்காது. அந்தளவுக்கு ட்ரோலான படமாக இந்தியன் 2 மாறியது.
கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கி வரும் தக் லைஃப் படத்தில் இருந்து துல்கர் சல்மான், ஜெயம் ரவி உள்ளிட்டோர் வெளியேறிய நிலையில், சிம்பு உள்ளே வந்தார். ஏகப்பட்ட சொதப்பல்கள் ஏற்பட்ட நிலையில், படத்தின் மேக்கிங் பணிகள் தாமதமாகி வருகின்றன. அதன் காரணமாக கண்டிப்பாக தக் லைஃப் திரைப்படம் இந்த ஆண்டு வெளியாக வாய்ப்பே இல்லை என சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆனால், தற்போது, தக் லைஃப் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக படக்குழு அறித்தாலும், த்ரிஷா சம்பந்தபட்ட பாடல் காட்சிகள் மட்டும் எடுக்கப்பட வேண்டியிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் போஸ்ட் புரொடக்சன் பணிகளை விரைந்து முடித்து பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதற்கான பணிகள் நடப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Readmore: தேர்வு விடுமுறை!. காலையிலேயே களைகட்டிய ஏற்காடு!. அலைமோதும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம்!