தமிழக வெற்றிக் கழக மாநாட்டினையொட்டி, சேலம் மாவட்டம் ஆத்தூரில் பணிக்குழுக்களுக்கான பயிலரங்கம் நடைபெற்றது. இந்த பயிலரங்கினை தொடங்கி வைத்து உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தவெகவில் பதவி என்பது நிரந்தரமானது அல்ல. எதிர்பார்ப்பில்லாமல் உழைப்பவர்களுக்கு அங்கீகாரத்தை விஜய் வழங்குவார் என்றும் தெரிவித்தார்.
நம்மை பார்த்துதான் மற்றவர்கள் அரசியலை கற்றுகொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டை விஜய் எடுத்துள்ளார் என்றார். மேலும் பேசுகையில், அப்பா அம்மா கால்ல மட்டும் தான் நீங்க விழணும். வேற யாரோட காலிலும் நீங்க விழக்கூடாது என விஜய் கூறியதை சூசகமாக குறிப்பிட்டுள்ளார் புஸ்ஸி ஆனந்த்.
முன்னதாக, பதவி வேண்டும் என்பதற்காக சில நிர்வாகிகள், புஸ்ஸி ஆனந்த் காலில் விழுந்து பதவியை பெற்றதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து செய்திகள் மற்றும் சமூக வலைதளத்தில் விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில், விஜய் கவனத்திற்கும் சென்றுள்ளது. கோபமடைந்ததாகவும் உடனடியாக இதுகுறித்து புஸ்ஸி ஆனந்திற்கு அறிவுரையும் வழங்கி உள்ளார். நமது கட்சியில் இதுபோன்று நடக்கக்கூடாது, எனவே இது தொடராமல் இருக்க இப்போதே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என விஜய் அறிவுரை வழங்கியது குறிப்பிடத்தக்கது.