அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவை தொடர்ந்து டெல்லியில் கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகம் திறப்பு விழா நிகழ்ச்சியையும் அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் புறக்கணித்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதாக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விழா கோவை அன்னூர் அருகே அ.தி.மு.கவினர் நேற்று (9.2.2025) நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் அதிமுகவின் மூத்த தலைவர்களின் ஒருவரான செங்கோட்டையன் கலந்துகொள்ளாதது அ.தி.மு.க-விற்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், இன்று ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செங்கோட்டையன், “அத்திக்கடவு – அவிநாசி திட்டக்குழு நடத்திய பாராட்டு விழாவை நான் புறக்கணிக்கவில்லை. என்னை வளர்த்து ஆளாக்கிய எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களின் படங்கள் வைக்கப்படாததால் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை” என்று தெரிவித்திருந்தார். அத்திக்கடவு திட்டத்தை கொண்டுவர 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா ரூ.3.72 கோடி நிதியளித்தார். ஆனால் திட்டப் பணிகளை தொடங்க அடித்தளமாக இருந்த தலைவர்களின் படங்கள் மேடையில் இல்லை” எனத் தெரிவித்திருந்தார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அத்திக்கடவு – அவினாசி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கும் குழுவை சார்ந்தவர்கள் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு என்னை சந்தித்தார்கள். அவர்கள் என்னை சந்தித்தபோது நான் வைத்த வேண்டுகோள் என்னவென்றால், இது தொடர்பாக என்னிடம் நீங்கள் பேசியிருந்தால் அதனை உங்களுடைய கவனத்திற்கு எடுத்து சொல்லிருப்பேன். பல்வேறு இடங்களில் நிகழ்ச்சி தொடர்பான பேனர்கள் வைக்கும்போது தான் என்னுடைய கவனத்திற்கு இது வந்தது. ஆகவே என்னை வளர்த்து ஆளாக்கிய தலைவருடைய படங்கள் இல்லை என்று கூறினார். மேலும், நான் நிகழ்ச்சியை புறக்கணிப்பது எனது நோக்கம் இல்லை எனவும் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

Readmore: அய்யானார் கோயிலை அபகரிக்கும் நடிகர் வடிவேலு?. பொங்கி எழுந்த கிராம மக்கள்!. பரபரப்பில் பரமக்குடி!. என்ன நடந்தது?