சென்னை இன்றைக்கு 2கே கிட்ஸ் இளைஞர்கள், கல்லூரி மாணவிகள் பலர் இன்ஸ்டாகிராமிலும் ஸ்னாப் சாட், பேஸ்புக், ட்விட்டர் உள்பட பல்வேறு சமூக வலைதளங்களில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் முகம் தெரியாதவர்களிடம் சாட்டிங் செய்வதை தாண்டி, அவர்களை காதலிப்பதிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், அப்படி யூத் என்று நினைத்து மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் 38 வயது நபருடன் பேசி பழகி உள்ளார்.

இதனை தொடர்ந்து இன்றைக்கு சில நடுத்தர வயது நபர்கள், தங்களை இளமையான ஹீரோ போன்ற போட்டாக்களை காட்டி சாட்டிங் செய்து பெண்களை ஏமாற்றி வருகின்றனர். மேலும், பெண்களும் அழகான ஹீரோ போல் இருக்கிறார் என்று நினைத்து ஏமாறுகிறார்கள். சிலர் நேரில் பார்க்காமல் பழகாமல், திருமணம் செய்து கொள்ளாமலேயே அந்தரங்க புகைப்படங்களை சாட்டிங் நண்பன் கேட்கிறான் என்பதற்காக அனுப்புகிறார்கள். மேலும், சில பெண்கள் அந்தரங்க உறுப்புகளை வீடியோ எடுத்து அனுப்புகிறார்கள். இதை வைத்துபிளாக்மெயில் செய்து அந்த பெண்களை காலி செய்கிறார்கள் சில நடுத்தர வயது ஆசாமிகள்.

அப்படித்தான் சேட்டிங் ஆப்பில் இளைஞர் போல நடித்து கல்லூரி மாணவியின் தனிப்பட்ட புகைப்படங்களை காட்டி மிரட்டிய 38 வயது நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த மாதம் அவரது செல்போனில் ஸ்னாப் சாட் என்ற செயலி வாயிலாக ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். தான் சென்னையை சேர்ந்த 25 வயது இளைஞர் என கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, இருவருக்கும் காதலாக மாறியுள்ளது. நாளடைவில் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கொள்வதாக பல்வேறு கவர்ச்சிகரமான ஆசைவார்த்தை கூறி தனிப்பட்ட புகைப்படங்களையும் கேட்டிருக்கிறார். பின்னர் சந்தேகமடைந்த மாணவி வீடியோ காலில் வரும் படி அழைத்திருக்கிறார். ஆனால் அந்த நபர் அதற்குமறுத்ததாக தெரிகிறது. இதனால் குழப்பமடைந்த மாணவி பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் மாணவியின் தனிப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதள
பக்கங்களில் பகிர்வதாக மிரட்டியுள்ளார். இதனையடுத்து, மாணவியின் பெற்றோர் செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் மாணவி கொடுத்த சமூக வலைதள கணக்கை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரின் விசாரணையில் அந்த நபர் சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் குமார் (38) என்பது தெரியவந்தது. மேலும், இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாகவும் அதேவேளையில் பகுதி நேர பைக் டாக்ஸி ஓட்டி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் போச்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.

Read More:கொசுக்களை பத்தி பேசாதீங்க..!! முன்னாள் CM-னு கூட பார்க்கல..!! ஓபிஎஸை கடுமையாக விமர்சித்த ஜெயக்குமார்..!!