அசாமின் திமா ஹசாவ் மாவட்டத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் திடீரென நீர் பெருக்கெடுத்து ஓடியதால், பல தொழிலாளர்கள் அப்பகுதியில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அசாம் மாநிலம் திமா ஹசாவ் மாவட்டத்தில் உள்ள உம்ராங்சோ பகுதியில் நிலக்கரிச் சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று தொழிலாளர்கள் 15க்கும் மேற்பட்டோர் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென சுரங்கத்திற்குள் வெள்ள நீர் புகுந்ததாக கூறப்படுகிறது. பல தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. உள்ளே சிக்கியவர்களின் நிலை என்ன என்பது பற்றி தற்போது வரை தெரியவில்லை. இதற்கிடையே ராட்சத எந்திரங்கள் உள்ளிட்டவை கொண்டு வரப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும், தொழிலாளர்கள் 300 அடி ஆழத்தில் சிக்கி இருப்பதாக கூறப்படும் நிலையில், ராட்சத மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீர் இறைக்கப்படுகிறது. தொடர்ந்து தீவிர மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. அதே சமயம் தொழிலாளர்கள் சிக்கியிருக்கக் கூடிய சுரங்கத்தில் தண்ணீர் சூழ்ந்திருப்பதாகவும், சுமார் 100 அடிக்கு நீர் நிரம்பியுள்ளதால் மீட்புப் பணியை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

“முதற்கட்ட தகவல்களின்படி, சில தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளனர். ஆனால் சுரங்கத்தின் இடம் தொலைதூரப் பகுதியில் உள்ளதால், எளிதில் அணுக முடியாததால், உள்ளே எத்தனை பேர் இருக்கிறார்கள், அவர்களின் நிலை என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை,” என்று டிமா ஹசாவோவின் துணை ஆணையர் சிமந்த குமார் தாஸ் கூறினார். மேலும் மீட்புப் பணியில் ராணுவத்தின் உதவியைக் கோரியுள்ளோம். மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) ஆகியவையும் சம்பவ இடத்திற்குச் சென்று விடிய விடிய மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

Readmore: பெண்ணின் ஆடைகளை கிழித்து; நடுரோட்டில் தரதரவென இழுத்து போட்டு தாக்கிய திருநங்கைகள்!. வெளியான அதிர்ச்சி வீடியோ!