கழிப்பறையில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதுதொடர்பாக டல்லாஸில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழக சவுத்வெஸ்ட் மெடிக்கல் சென்டரில் உள்ள பெருங்குடல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் லாய் ஜூ கூறியதாவது, இத்தகைய செயலானது மூல நோய் மற்றும் இடுப்பு தசைகளில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துவதாக கூறியுள்ளார். நியூயார்க்கின் ஸ்டோனி புரூக் மெடிசினில் உள்ள அழற்சி குடல் நோய் மையத்தின் உதவி பேராசிரியர் மற்றும் இயக்குநரான Farah Monjour கூற்றுப்படி, சராசரியாக மக்கள் 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே கழிப்பறையில் செலவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

டாய்லெட் சீட்டில் நீண்ட நேரம் அமர்ந்தால் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதற்கு அறிவியல் காரணங்களும் உண்டு. திறந்த ஓவல் வடிவ கழிப்பறை சீட் ஆனது இடுப்பை அழுத்துகிறது. மேலும், புவியீர்ப்பு உடலின் கீழ் பாதியை கீழே இழுக்கிறது. இதன் காரணமாக அதிகரித்த அழுத்தம் உங்கள் இரத்த ஓட்டத்தை பாதிக்கிறது. இதன் விளைவாக ஆசனவாய் மற்றும் கீழ் மலக்குடலைச் சுற்றி நரம்புகள் மற்றும் இரத்த நாளங்கள் அதிகரிக்கின்றன. இதனால் மூல நோய் அபாயம் அதிகரிக்கிறது.

கழிப்பறைக்கு ஸ்மார்ட்போன் எடுத்துச் செல்பவர்கள் வழக்கத்தை விட அதிக நேரத்தை அங்கேயே செலவிடுகின்றனர். அவ்வாறு செய்வது உங்கள் முதுகு மற்றும் எலும்புகளுக்கு நல்லதல்ல. மேலும், நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது இடுப்பு தசைகளில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது. இது பல ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கும்.

மலச்சிக்கல் அல்லது கழிப்பறையில் நீண்ட நேரம் உட்கார வேண்டிய நிலை புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். அதாவது பெருங்குடலில் ஒரு வளர்ச்சி அதிகமாக இருந்தால், அது உங்கள் மல ஓட்டத்தைத் தடுக்கலாம், இது மலச்சிக்கல் மற்றும் இரத்தப்போக்குக்கு வழிவகுக்கும் என்று ஆய்வு கூறுகிறது. பெருங்குடல் என்பது செரிமான அமைப்பில் உள்ள ஒரு குழாய் வடிவ உறுப்பு ஆகும். இது உணவில் இருந்து தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி, கழிவுகளை மலத்தில் வெளியேற்றுகிறது. பெருங்குடல் புற்றுநோயானது இன்றைய இளைஞர்களிடையே அதிக அளவில் காணப்படுகிறது.

Readmore: இந்து சமய அறநிலையத் துறையை கலைக்க வேண்டும்!. பொன் மாணிக்கவேல் ஆவேசம்!. சேலத்தில் பரபரப்பு பேட்டி!