வீட்டில் சமைத்த உணவுகள் கூட அதிக கொழுப்பு, அதிக சர்க்கரை அல்லது உப்புடன் தயாரிக்கப்பட்டால் “ஆரோக்கியமற்றதாக” இருக்கும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ( ICMR ) கூறியுள்ளது.

உணவகங்களில் இருந்து கிடைக்கும் உணவை விட வீட்டில் சமைத்த உணவு ஆரோக்கியமானது என்ற பொதுவான கருத்து மக்கள் மத்தியில் இருந்து வருகிறது, இந்தியர்களுக்கான புதிய உணவு வழிகாட்டுதல்களில் மருத்துவக் குழுவால் எதிர்க்கப்பட்டது. கொழுப்புகள், சர்க்கரை அல்லது உப்பு அதிகம் உள்ள உணவுகள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும், அது எங்கு சமைக்கப்பட்டாலும் என தெரிவிக்கிறது. ICMRஇன் படி, கொழுப்புகள், சர்க்கரை அல்லது உப்பு (HFSS) அதிகம் உள்ள உணவுகள் பெரும்பாலும் கலோரிகள் மற்றும் குறைந்த நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து கொண்டவை.

உணவுகளில் கொழுப்பு மற்றும் சர்க்கரை அதிகமாக இருக்கும் போது, ​​உடல் பருமன் போன்ற நிலைமைகளுக்கு வழிவகுக்கும் கலோரிகள் நிறைய உள்ளன என்று மருத்துவ குழுவின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
வழிகாட்டுதல்களின்படி “அத்தியாவசியமான மேக்ரோநியூட்ரியண்ட்ஸ் (அமினோ அமிலங்கள் மற்றும் கொழுப்புகள்), நார்ச்சத்து மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் போன்ற வைட்டமின்கள், தாதுக்கள், பைட்டோநியூட்ரியண்ட்கள், பயோ-ஆக்டிவ் பொருட்கள் ஆகியவற்றை வழங்கும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வதில் இருந்து ஒருவரை இது விலக்குகிறது”.

உணவில் அத்தியாவசிய அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் இல்லாததால், இரத்த சோகை, அறிவாற்றல் (மூளையின் செயல்பாடு), கற்றல் திறன் மற்றும் நினைவாற்றல் ஆகியவற்றை பாதிக்கும் மற்றும் தொற்றாத நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் (எ.கா. வகை 2 நீரிழிவு மற்றும் உடல் பருமன்). வீட்டில் சமைக்கப்படும் உணவில் அதிக உப்பு அல்லது சர்க்கரை அல்லது கொழுப்பு நிறைந்ததாக இருந்தால், அது ஊட்டச்சத்து மதிப்பு குறைவாகவும் கலோரிக் மதிப்பு அதிகமாகவும் மாறும்.

சாச்சுரேட்டட் கொழுப்பு, உடல் பருமனின் அபாயத்தை அதிகரிக்கிறது என்று மருத்துவ ஆராய்ச்சி அமைப்பு குறிப்பிடுகிறது. நெய் அல்லது வெண்ணெய், தேங்காய் எண்ணெய், பாமாயில் மற்றும் வனஸ்பதி போன்ற உணவுகளிலும் சாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளன. ஒரு நாளைக்கு 10 கிராமுக்கு மேல் சாச்சுரேட்டட் கொழுப்புகள் எடுத்துக்கொள்வது ஆரோக்கியமற்றது என்று அவர்கள் கூறினர். ஒரு நாளைக்கு உப்பின் சாதாரண உட்கொள்ளல் 5 கிராமுக்கு மேல் போகக்கூடாது. காரமான தின்பண்டங்கள் மற்றும் ஊறுகாய் போன்ற வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளில் கூட அதிக அளவு உப்பு இருக்கலாம் என்று ஐசிஎம்ஆர் எச்சரித்தது.

சமைப்பதற்கு கடுகு எண்ணெய் மற்றும் நெய்யை பயன்படுத்தலாம். உணவை டீப் ஃப்ரை செய்வதற்கு மாறாக, கிரில், பான் ஃப்ரையிங் , ஏர் ஃப்ரையிங் செய்யலாம். நீங்கள் அரிசி சாப்பிடுபவர்கள் என்றால், பிரியாணி அல்லது புலாவ் போன்றவற்றிக்கு steamed rice அல்லது brown rice ஆகியவற்றை பயன்படுத்துங்கள். சாதத்துடன் சாப்பிடுவதற்கு பருப்பு மற்றும் காய்கறிகளை தேர்வு செய்யுங்கள்.

மேலும், பரோட்டா, நான் போன்றவற்றிக்கு பதிலாக சப்பாத்தியை சாப்பிடலாம். ஏனெனில், நான், பரோட்டா மைதாவில் செய்யப்படுகிறது. இதில், 250-300 =கலோரிகள் இருக்கிறது. சரியாக சமைக்கவில்லை எனில், 600 கலோரிகளை வரை செல்வதற்கு வாய்ப்பு உள்ளது. அதிகளவு மசாலாப் பொருட்களை சேர்ப்பதற்கு மாறாக herbs மூலிகைப் பொருட்களைப் பயன்படுத்துங்கள். ஆரோக்கியமான உணவுகளை கூட சரியான விகித்ததில் சாப்பிடவில்லை எனில், அதுவே உடலுக்கு ஆரோக்கியமற்றதாக மாறிவிடும். மேலும், இரவு உணவுக்கு நாம் விரும்பும் உணவின் அளவை விட சற்று குறைவாகவே சாப்பிடலாம்.

Readmore: குட்நியூஸ்!. விவசாயிகளுக்கு இனி ரூ.4000!. பிஎம் கிசான் திட்டத்தின் முக்கிய அப்டேட்!