இந்தியா டுடே-சி-வோட்டர் மனநிலை கருத்துக் கணிப்புப்படி, இன்று மக்களவைத் தேர்தல் நடந்தாலும் தமிழகத்தில் பாஜக வெற்றிபெற வாய்ப்பே இல்லை என தெரியவந்துள்ளது. கருத்துக் கணிப்புப்படி, காவி கட்சிக்கு பூஜ்ஜிய இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும், வாக்குப் பங்கில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்படும் என்றும் கணித்துள்ளது.
இந்தியா உள்ள அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் இந்தியா டுடே – சிவோட்டர் இணைந்து 2025 ஜனவரி 2ஆம் தேதி முதல் பிப்ரவரி 9ஆம் தேதி வரை ’மூட் ஆஃப் தி நேஷன்’ (MOTN) என்ற பெயரில் கருத்துக் கணிப்பு நடத்தியது. இந்த கருத்துக் கணிப்பில் சுமார் 1,25,123 பேர்களிடம் அவர்களின் மனநிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
அதில், பாஜக தமிழகத்தில் தனது நிலைப்பாட்டை உறுதி செய்ய கூட்டணி அமைப்பதே ஒரே வழியாக கருத்து கணிப்பு கூறுகிறது. குறிப்பாக பாஜக, அதிமுக மற்றும் விஜய்யின் கட்சியுடன் ஒரு பெரிய கூட்டணியை உருவாக்கினால் மட்டுமே, திமுகவை சவால் செய்ய ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். “அண்ணாமலை தலைமையுடன் பாஜக 20% என்ற குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. அதைத் தாண்டி முன்னேறி திமுகவை சவால் செய்வது பாஜகவுக்கு மிக முக்கியமானதாக இருக்கும்,” என்று அரசியல் நிபுணர்கள் தகவல் கூறுகின்றனர்.
அதாவது, தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக கூட்டணி வாக்கு சதவீதம் 5% உயர்ந்துள்ளது. பாஜக கூட்டணியின் வாக்கு சதவீதம் 3% உயர்ந்துள்ளது, அதிமுகவின் வாக்கு 3% சரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி 47% வாக்குகளைப் பெற்றிருந்தது. பாஜக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி 18% வாக்குகளையும், அதிமுக கூட்டணி 23% வாக்குகளைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துக் கணிப்பு தொடர்பாக சி-வோட்டர் இயக்குனர் யஷ்வந்த் தேஷ்முக் கூறுகையில், ”தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர் விஜய். 2026 சட்டமன்ற தேர்தலில் X ஃபேக்டராக இருக்கக் கூடும். தேசிய அளவில் அவருக்கு செல்வாக்கு இல்லாவிட்டாலும், களத்தில் ஒரு முக்கிய பிளேயராக மாறி வருகிறார். எதிர்க்கட்சி வாக்குகள் பிரிவது என்.டி.ஏ. கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.