சேலத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியில் மோசடி செய்ததால் உயரதிகாரிகளிடம் புகார் அளித்த இளைஞரை நண்பர்களுடன் சேர்ந்து மேலாளர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாநகர் குகை ஆறுமுகப்பிள்ளை கோவில் தெருவை சேர்ந்தவர் கணேஷ். இவர் மதுரையை தலைமை இடமாக கொண்டு சேலம் பெரமனூர் கிளையில் செயல்பட்டு வரும் டிரேடிங் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். இதில் சேலம் அன்னதானபட்டியை சேர்ந்த யுவராஜ் மேலாளராகவும், கருப்பூரை சேர்ந்த சந்தோஷ்குமார், ஆதிகேசவன் ஆகியோரும் வேலைசெய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தனது கம்பெனி புதிய கட்டிடத்திற்கு மாற்றிய நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் சென்றுவிட்டு வீடுதிரும்பிய கணேஷ் வீட்டில் தாய் தந்தையிடம் பேசிவிட்டு உறங்க சென்றுள்ளார். நள்ளிரவில் தந்தையின் செல்போன் எண்ணிற்கு, கணேஷ் அறையில் இருந்து செல்போன் மூலமாக தன்னால் முடியவில்லை என்று கூறி அழைப்பு வந்துள்ளது. பின்னர் ஃபுட் பாய்சன் ஆகிவிட்டதாக கணேஷ் கூறிய நிலையில் தண்ணீர் குடித்தால் சரியாக விடும் என்று படுக்க வைத்துள்ளனர். மீண்டும் மீண்டும் பிரச்சினை எழும்பிய நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்ததில் உடலில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற செவ்வாய்ப்பேட்டை போலீசார், இதுகுறித்து விசாரணையை மேற்கொண்டனர். எவ்வித தகவலும் கிடைக்காத நிலையில், மேலாளர் யுவராஜ் வீட்டில் நடத்தப்பட்ட விசாரணையில் துப்பு துலங்கியது. அதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. மண்டல மேலாளராக யுவராஜ் செய்யும் தவறுகளை, கணேஷ் மதுரையில் உள்ள அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார். இதனை விசாரித்த அந்த கம்பெனியின் அதிகாரிகள் யுவராஜை கண்டித்துடன் அவருக்கான அதிகாரத்தை குறைத்துவிட்டனர். மேலும் ரமேஷிற்கு மேலாளர் பதவி உயர்வு வழங்கவும் முடிவு செய்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த யுவராஜ் தன்னுடன் வேலைபார்த்து வரும் சந்தோஷ்குமார், ஆதிகேசவன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி கணேஷை தீர்த்தக்கட்ட திட்டமிட்டார். இதன்படி கடந்த 2 ஆம் தேதி மதுபார்ட்டி வைப்பதாக கூறி, கணேசை அழைத்து சென்று மதுவில் விஷயத்தை கலந்து கொடுத்தார். உடனே கணேஷ் உயிரிழந்து விடக்கூடாது. படிப்படியாக உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தது போன்று இருக்க வேண்டும் என்று கூறி மெடிக்கல் ரெப் மூலமாக ஆலோசனை பெற்று, மாரியப்பன் என்பவர் மூலம் மருந்து வாங்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வீட்டிற்கு சென்ற கணேஷ் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து தகவலின் பெயரில் செவ்வாய்பேட்டை காவல் நிலைய தனிப்படை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பதிவில் விஷம் கலந்து கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து யுவராஜ், சந்தோஷ்குமார், ஆதிகேசவன், கருப்பூரை சேர்ந்த மாரியப்பன் ஆகியோரை கொலை முயற்சி வழக்கு பிரிவில் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Readmore: வேலைக்கு சேர்ந்த 3 நாளில் பணி பெண் செய்த செயல்..! 6 லட்சம் அபேஷ்…!!