கடலூரை சேர்ந்த கல்லூரி மாணவியை சேலம் அழைத்துவந்து வாடகை வீட்டில் வைத்து பலமுறை உல்லாசமாக இருந்த இளைஞர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்தவர் 17 வயது மாணவி. இவர் திருச்சியில் பெண்கள் விடுதியில் தங்கி தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 22.9.2024 அன்று பெண்கள் விடுதியில் இருந்து வெளியே சென்ற மாணவி திடீரென காணவில்லை. இது குறித்து விடுதி நிர்வாகத்தினர் மாணவியின் தந்தைக்கு அளித்தனர். இதையடுத்து அவர் உடனடியாக திருச்சி சென்று அங்குள்ள ஒரு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து சேத்தியாத்தோப்பு அருகே உள்ள சீயப்பாடி கிராமத்தை விஜய்(23) என்பவா் மாணவியை சேலத்துக்கு காரில் அழைத்து சென்று ஒரு வாடகை வீட்டில் தங்க வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து சேலம் விரைந்த திருச்சி போலீசார், மாணவியை மீட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் கடந்த 14.11.2024 அன்று ஆஜர்படுத்தினர். பின்னர் அந்த மாணவி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதையடுத்து மாணவியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது, விஜய் தன்னை சேலத்துக்கு அழைத்து சென்று அங்குள்ள ஓரு வீட்டில் 2 மாதம் தங்க வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாதாக கூறினார். இதற்கு உடந்தையாக விஜய்யின் தம்பி விஜயராகவன் மற்றும் 2 பேர் இருந்ததாகவும், தற்போது 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறினார். இதையடுத்து, விஜய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதற்கு உடந்தையாக இருந்த விஜயராகவன் உள்பட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.