சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 59 ஆயிரத்தை எட்டி, புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

அக்டோபர் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று (அக்.28ஆம் தேதி) ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.58,520க்கும், கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.7,315க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று (அக்.29ஆம் தேதி) ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.60 அதிகரித்து 7375 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ஒரு சவரன் ரூ.59,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 18 காரட் ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6075க்கும், சவரனுக்கு ரூ.400 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.48,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.1 உயர்ந்து ரூ.108க்கும், ஒரு கிலோ ரூ.1,08,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Readmore: இனி வெப்ப அலையால் ஏற்படும் மரணங்களுக்கு தலா ரூ.4 லட்சம்!. மாநில பேரிடராக அறிவித்து தமிழக அரசு அதிரடி!