சீமானை நம்பி கட்சிக்காக உழைப்பு, நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அதனால் நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறுவதாக முடிவெடுத்துள்ளேன் என சேலம் மேற்கு மாவட்ட செயலர் ஜெகதீஷ் அறிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட செயலராக இருந்தவர் ஜெகதீஷ், 38; முனைவர் பட்டம் பெற்ற இவர், அடிப்படை உறுப்பினர் மற்றும் கட்சி பதவியில் இருந்து விலகுவதாக, சமூக வலைதளத்தில் நேற்று பதிவிட்டுஉள்ளார். அதில், இதுவரை என்னோடு களமாடிய உண்மை நிர்வாகிகளுக்கு நன்றி. நான் மிகவும் நேசித்த நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவது கடினமானதாக இருந்தாலும், கட்சியின் சமீபகால செயல்பாடு, குறிப்பாக உட்கட்டமைப்பில் கவனம் செலுத்தாதது வருத்தத்தை ஏற்படுத்தியது. அதனால் விலகல் முடிவுக்கு வந்தேன்.

இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், என்னைப் போன்று, 120க்கும் மேற்பட்ட மாவட்டச்செயலர்கள் கட்சியில் உள்ளனர். தேர்தலில் தனித்துத்தான் போட்டியிட வேண்டும் என அவர் முடிவெடுத்து அறிவிப்பதற்கு முன், எங்களைப் போன்றோரை அழைத்துப் பேசி கருத்துக் கேட்டிருக்கலாம். அதை செய்யவில்லை. தன்னிச்சையாகவே அறிவித்தார். ”இதனால், போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் தோல்வியே கிடைத்தது. அதற்காக, நாங்கள் பட்ட பாடெல்லாம் வீணானது. தொடர்ந்தும், சீமானை நம்பி கட்சிக்காக உழைப்பு, நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அதனால் வெளியேறுவது என முடிவெடுத்தேன் என்று கூறியுள்ளார்.

Readmore: குட்நியூஸ்!. இனி இலவசமாக கார் ஓட்ட கத்துக்கலாம்!. மாதம் தோறும் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை!. தமிழக அரசு புதிய ஏற்பாடு!.